சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. - 821
போலி நண்பர்களை நேரம் பார்த்துக் கைவிடுக
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். - 822
வஞ்சகர் நட்பு விலைமகளிரின் மனம்போல
வேறுபடும்
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. - 823
பல நல்ல நூல்களைப் படித்தும் மனம் திருந்துதல்
அரிது
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். - 824
சிரித்துப் பேசினாலும் மனதில் ஒட்டாதவரை
அஞ்சி நீக்குக
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. - 825
மனதால் ஒருமைப்பாடில்லாதார் பேச்சைக்
கேட்காதே
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். - 826
நண்பர்போல இனியவை சொன்னாலும், பகைவர் சொல் தீமைதரும்
சொல்வணக்கம் ஒன்றார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். - 827
வில் வளைவது தீங்குசெய்யவே, அதுபோல பணிவையும் ஆராய்ந்தறிக
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. - 828
எதிரி வணக்கத்தையும், கண்ணீரையும் நம்பாதே தீமை மறைந்திருக்கும்
மிகச்செய்து தம்மௌfளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.- 829
புறத்தே புகழ்ந்து அகத்தே இகழும் அகநட்பில்லாதவர்கள்
நட்பை விடுக
பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகநட்பு ஒரீஇ விடல். - 830
எதிரிகளிடம் பழகும் காலம் வந்தால் முகத்தளவே
நட்புக் கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக