பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது. - 811
அன்பானவர் போல நடிப்போர் நட்பு, வளர்வதைவிட நீங்குவதே இனிது
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என். - 812
பயன்கருதியே நட்புக்கொள்வோரின் நட்பை
இழப்பதே நல்லது
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். - 813
சுயநல நண்பர், விலைமகளிர், கள்வர் மூவரும் சமமானவரே
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. - 814
போர்களத்தில் உதவாத குதிரை போன்ற நண்பர்களை
நீங்குவதே நலன்
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. - 815
சிறியோர் நட்பு தீமைதரும் என்பதால் அவர்கள்
நட்பை விடுவதே நன்று
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். - 816
மூடனிடம் கொள்ளும் நட்பைவிட அறிவாளியுடன்
பகை கொள்வதுமேல்
நகைவகைய ராகிய நட்பின் பகைவரான்
பத்தடுத்த கோடி உறும். - 817
சிரித்து நடிக்கும் நட்பைவிட பகைவரால்
ஏற்படும் துன்பம் பெரிதல்ல
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். - 818
நம் செயலுக்குத் தடையாக இருப்பவர் நட்பை
கைவிடுதல் சிறந்தது
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.- 819
சொல்வேறு, செயல்வேறாக நடப்போர் நட்பு, கனவிலும் துன்பம்தரும்
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. - 820
அறையில் பாராட்டி, பலர் முன் இகழ்வோர் நட்பு தேவையில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக