வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 6 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 82. தீ நட்பு

 


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலின் குன்றல் இனிது. - 811

அன்பானவர் போல நடிப்போர் நட்பு, வளர்வதைவிட நீங்குவதே இனிது 

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என். - 812

பயன்கருதியே நட்புக்கொள்வோரின் நட்பை இழப்பதே நல்லது

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர். - 813

சுயநல நண்பர், விலைமகளிர், கள்வர் மூவரும் சமமானவரே

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை. - 814

போர்களத்தில் உதவாத குதிரை போன்ற நண்பர்களை நீங்குவதே நலன்

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று. - 815

சிறியோர் நட்பு தீமைதரும் என்பதால் அவர்கள் நட்பை விடுவதே நன்று

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும். - 816

மூடனிடம் கொள்ளும் நட்பைவிட அறிவாளியுடன் பகை கொள்வதுமேல்

நகைவகைய ராகிய நட்பின் பகைவரான்

பத்தடுத்த கோடி உறும். - 817

சிரித்து நடிக்கும் நட்பைவிட பகைவரால் ஏற்படும் துன்பம் பெரிதல்ல  

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல். - 818

நம் செயலுக்குத் தடையாக இருப்பவர் நட்பை கைவிடுதல் சிறந்தது

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.- 819

சொல்வேறு, செயல்வேறாக நடப்போர் நட்பு, கனவிலும் துன்பம்தரும் 

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு. - 820

அறையில் பாராட்டி, பலர் முன் இகழ்வோர் நட்பு தேவையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக