பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. - 801
நண்பர் உரிமையுடன் செய்வதை எந்நிலையிலும்
ஏற்பதே பழைமை
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.- 802
உரிமைச் செயலே நட்புக்கு அழகு. அதை ஏற்பது
சான்றோரின் கடன்
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. - 803
உரிமையுடன் செய்யாவிட்டால் நெடுநாள் நட்பில்
பயனில்லை
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். - 804
கேட்காமல் செய்யும் நண்பரின் செயலையும்
விருப்புடன் ஏற்றுக்கொள்
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். - 805
அறியாமையாலும், உரிமையாலும் நண்பர் எது செய்தாலும் வருந்தாதீர்
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்துத்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. - 806
நெடுநாள் நட்பை போற்றுவோர் அவர் செய்த
தவறுக்காக நீங்கார்
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். - 807
அன்புடன் பழகியோர் பெருந்தீங்கு செய்தாலும்
பொறுத்திருங்கள்
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். - 808
தன் தவறை விட்டுக்கொடுக்காத நண்பர் தவறு
செய்யும் நாள் நன்னாள்
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. - 809
நெடுநாள் நட்பை கைவிடாதவரை உலகம் விரும்பிப்
போற்றும்.
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். - 810
பழைய நட்பை விடாதவர்களை பகைவரும் விரும்புவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக