நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. -791
நண்பரை தேர்ந்தபின் பிரிய இயலாது அதனால்
ஆராய்ந்து நட்பு கொள்
ஆய்ந்தாய்த்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். - 792
ஆராயாமல் கொள்ளம் நட்பு அழிவிற்கே அடித்தளமாகும்
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு. - 793
குணம், குடி, குற்றம், சுற்றம் ஆகியன ஆராய்ந்து நட்பு கொள்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. - 794
நற்குடிப் பிறந்து பழிக்கு அஞ்சுவோரை
எதைக் கொடுத்தும் நண்பராக்கு
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.- 795
அழவைத்தோ, அடித்தோ நல்வழி நடத்துவோரை நண்பராகக் கொள்க
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.- 796
துன்பமே நண்பரையும், நட்பின் ஆழத்தையும் அளக்கும் நற்கருவி
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். - 797
ஒருவருக்கு ஊதியம் என்பது அறிவில்லாதாரின்
நட்பை விடுவதே
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.- 798
ஊக்கம் நீக்கும் செயல்களையும், துன்பத்தில் நீங்கும் நட்பையும் விடுக
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.- 799
துன்பத்தில் உதவாத நட்பு சாகின்ற காலத்திலும்
துன்பம் தரும்
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.- 800
நல்லார் நட்பை நீங்காதே, தீயோர் நட்பை ஒன்று கொடுத்தும் நீக்குக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக