உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. - 761
நால்வகைப் படைகளைவிட சிறந்த செல்வங்கள்
வேறு இல்லை
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. - 762
அஞ்சாமல், மனவுறுதியுடன் போரிடுதல் பழம்பெரும்படைக்கு அணி
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். - 763
கடல்போல எலிகள் கூட்டமிருந்தாலும் நாகத்தின்
முன் நிற்கமுடியுமா
அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. - 764
எதிரிகளின் சதிக்குப் இரையாகமல், அஞ்சாமையுடையதே படை
கூற்றடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. - 765
எமன் வந்தாலும் கூடிநின்று எதிர்க்கும்
ஆற்றல் பெற்றதே படை
மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. - 766
வீரம், மானம், நடத்தை, நம்பிக்கை ஆகியன படைக்குப் பாதுகாப்பு
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. -767
போரில் தடைகளைக் கடந்து முன்னேறுவதே சிறந்த
படை
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். - 768
வீரத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதே படை அணிவகுப்பு
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.- 769
சிறுமை, வெறுப்பு, வறுமை இல்லாததே நல்ல படை
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். -770
சிறந்த படையானாலும் அதன் வலிமை தலைமையாலே
சிறப்படையும்
அருமை! நறுக்கென்று விளக்கம்!
பதிலளிநீக்கு