வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். - 1001
சேர்த்த பொருளை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால்
பயனில்லை
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. - 1002
பொருள்தான் எல்லாம் என எண்ணி ஈயாதவர்
இழிவானவர்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை. - 1003
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பவர் நிலத்துக்கு சுமையாவர்
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். - 1004
பிறருக்கு உதவாத ஒருவனின் மறைவுக்குப்
பின் ஏதும் எஞ்சி நிற்காது
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்க்கிய
கோடியுண் டாயினும் இல். - 1005
வழங்கி, அனுபவித்து வாழாதவர்களுக்கு பொருளால் பயனில்லை
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். - 1006
நுகராமல், வழங்காமல் வாழ்பவன், சேர்த்த செல்வத்தின் நோயாவான்
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. - 1007
உதவாதவன் செல்வம், பேரழகி தனித்து முதுமையடைந்தது போன்றது
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. - 1008
கஞ்சனின் செல்வம், ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தது போன்றது
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர். - 1009
அன்பு, அறம் நீக்கிச் சேர்த்த செல்வத்தை பிறரே அனுபவிப்பர்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து. - 1010
வள்ளல் வறுமையடைதல் மேகம் வறண்டதைப் போன்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக