வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 27 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 100. பண்புடைமை

 

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு. - 991

யாரும் பண்புடையாளராவதற்கு எளிமையே நல்ல வழி

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு. - 992

அன்பும், நல்ல குடும்பத்தில் பிறத்தலும் பண்பாளரின் அடையாமாகும்

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. - 993

உறுப்புகளின் சிறப்பைவிட பண்பின் சிறப்பே ஒப்பிடத்தக்கது

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு. - 94

அன்புடன், நன்மை செய்தவர்களை உலகம் பாராட்டும்

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு. -995

விளையாட்டுக்கும் ஒருவரையும்  இகழாமல், பண்புடன் நடந்துகொள்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன். - 996

பண்புடையவர்களால் தான் இவ்வுலகமே அழியாது உள்ளது

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர். - 997

அரம்போன்ற கூர்மையான அறிவும், பண்பின்றிப் பயனில்லை

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.- 998

தீங்கிழைத்தவரிடமும் பண்பின்றி நடத்தல் இழுக்காகும்  

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள். - 999

சிரிக்கும் பண்பில்லாதவர்களுக்குப் பகலும் இரவு போன்றதே

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று. - 1000

பண்பிலாதார் பெற்ற செல்வம், பாத்திரத்தால் பால் கெட்டது போன்றது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக