வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 17 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 66.வினைத்தூய்மை

 


 

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாந் தரும்.- 651

துணையால் நன்மை விளையும், வினைத் தூய்மை யாவும் தரும்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.- 652

புகழும், நன்மையும் தராததை விட்டுவிடுக

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.- 653

வாழ்வில் உயர எண்ணுபவர் கெடுதல் செய்யக்கூடாது   

இடுக்கண் படினும் இழிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.- 654

மனவலிமையுடையவர் துன்பம் வந்தபோதும் இழிசெயல் செய்யார்

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றென்ன செய்யாமை நன்று.- 655

தவறு செய்யாதீர், தவறிச் செய்தால் அத்தவறை மீண்டும் செய்யாதீர்

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.- 656

தாயின் பசி தீர்ப்பதாயினும் இழிசெயல்களை செய்யாதீர்

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.- 657

பழியைச் சுமந்து செல்வதைவிட சான்றோர் வறுமையை மேல்

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.- 658

இழிசெயலை முடித்த பின்பும் துன்பம் வரும்    

அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.- 659

பிறர் அழப் பெற்ற செல்வம் நீ அழ நீங்கும், நற்செல்வமே நிலைக்கும்

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. - 660

பழிச்செல்வம் பசுமண் கலத்தில் இட்ட நீர் போன்றது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக