அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.- 711
பார்வையாளரின் தன்மையறிந்து, ஆராய்ந்து பேசுவோர் நல்ல அறிஞர்
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். - 712
சொற்களின் சிறப்பை அறிந்தவர் அதை அவையறிந்து
வெளிப்படுத்துவர்
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். - 713
அவையறியார், சொல்லும் முறையும் அறியார்
ஆவார்
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.- 714
அவையோருள், அறிவாளி, பேதையர் தன்மையறிந்து
பேசுக
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. -715
அறிவுமிக்கவர்கள் முன்னர் பேசாமலிருப்பதே
அறிவாகும்
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. - 716
அறிவாளிகள் முன் ஏற்படும் இழுக்கு, பெருங்குற்றமாகும்
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. - 717
நல்லறிஞர் பேச்சில் நல்ல நூல்களின் பெருமை
விளங்கும்
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. - 718
ஆர்வமுடையார் முன் பேசுதல் நற்பயிருக்கு
நீர் பாய்ச்சுவது போன்றது
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச் சொல்லு வார்.- 719
அறிவார்ந்த அவையில் பேசுவோர், பேதையார் முன் பேசாமை நன்று
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். - 720
அறிவற்றார் முன் பேசுதல் அமுதத்தை கீழே
சிந்துவது போன்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக