அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். -611
அரிய செயலும் முயன்றால் வெற்றி தரும்
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.- 612
எச்செயலையும் இடையில் விட்டவரை இவ்வுலகம்
விட்டுவிடும்
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.- 613
முயற்சி என்ற பண்பே, உதவுதல் என்ற மேன்மையின் இருப்பிடம்
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.- 614
ஊக்கமில்லாதவன் செய்யும் உதவி, பேடி கை வாள் போன்றது
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.- 615
இன்பத்தைவிட செயலை விருப்புபவனே உறவினர்க்கு
தூணாவான்
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.- 616
செல்வத்துக்கு அடிப்படை முயற்சி, முயற்சியின்மையே வறுமை
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.- 617
முயல்பவரிடம் திருமகளும், முயலாதவரிடம் மூதேவியும் தங்குவர்
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.- 618
உடல் உறுப்புக் குறைகள் குறைகளல்ல, அறிய முயலாமயே குறை
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.- 619
தெய்வத்தால் ஆகாததும் முயற்சித்தால் கைகூடும்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.- 620
தொடர்ந்த முயற்சி விதியையும் மாற்றிவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக