பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 60. ஊக்கம் உடைமை


 

உடையரெ எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.- 591

ஊக்கத்தைத் தவிர பிற உடைமைகள் பெரிதல்ல

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.- 592

பொருளுடைமை நீங்கிவிடும், ஊக்கமாகிய உடைமை நீங்காது   

ஆக்கம் இழந்தேமெனறு அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.- 593

பெருஞ்செல்வத்தை இழந்தாலும் மனவுறுதியுடையார் கலங்கார்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.- 594

ஊக்கமுடையவரிடம் செல்லும் வழிகேட்டு செல்வம் வந்து சேரும்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.- 595

நீரளவுக்கு மலர் நீளும், ஊக்கத்தின் அளவே உயர்வு அமையும்

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.- 596

கிடைக்காவிட்டாலும் உயர்வாக எண்ணுவதே என்றும் உயர்வு

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டன்றுங் களிறு. - 597

அம்பு தைத்தும் கலங்காத யானைபோல துன்பத்தில் கலங்காதிரு  

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னுஞ் செருக்கு.- 598

ஊக்கமுடையவருக்கே ஈகைப் பண்பு என்னும் செருக்கு இருக்கும் 

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.- 599

ஊக்கமுடைய புலியிடம், பெரிய யானையும் தோற்றுவிடும்

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்

மரம்மக்க ளாதலே வேறு.- 600

ஊக்கமில்லாதவர்கள் மரத்துக்கு ஒப்பானவர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக