ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.- 581
நல்ல ஒற்றனும், நல்ல நூலும் அரசனின் இரு கண்கள்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.- 582
எங்கும், எப்போதும், எல்லோரிடமும் ஒற்றராய்தல் மன்னர் கடன்
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றிங் கொளக்கிடந்தது இல்.- 583
ஒற்றாடாத மன்னன் வெற்றிபெறுவது இல்லை
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. - 584
பணியாளர், உறவினர், எதிரி எனப் பாகுபாடின்றி யாரையும் ஆய்ந்தறி
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.- 585
மாற்று உருவம், தூங்காமை, அஞ்சாத திட மனமும் கொண்டவனே ஒற்றன்
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.- 586
தவக்கோலத்திலும் ஒற்றாய்ந்து, பிடிபட்டாலும் சோர்விலானே ஒற்றன்
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.- 587
ஒற்றாடியதை ஐயமின்றி துணிந்து கூறுபவனே
ஒற்றன்
ஒற்றோற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.- 588
ஒற்றன் கூறிய செய்தியை மறு ஒற்றன் வழி
உறுதிப்படுத்துக
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.- 589
மூன்று ஒற்றர்களிடம் தனித்தனியே கேட்டு
செய்தியை நம்பு
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.- 590
சிறந்த ஒற்றனாயினும் அவனுக்கு மறைவாகவே
சிறப்பு செய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக