தக்காங்கு நாடிச் தலைச்செல்லா வண்ணத்தால்
ஓத்தாங்கு ஒறுப்பது வேந்து. - 561
மீண்டும் குற்றம் செய்யாதபடி தண்டிபவனே
வேந்தன்
கடிதோச்சி மெல்ல ஏறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். - 562
கடுமையாக தண்டிப்பதுபோல மென்மையாக தண்டிப்பவரே
நல்லோர்
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். - 563
கொடுங்கோலாட்சி நெடுங்காலம் நிலைக்காது
கெட்டொழியும்
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். - 564
மக்களை அச்சப்படுத்தும் அரசன் விரைவில்
கெடுவான்
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. - 565
இன்னாத செய்யும் அரசனின் செல்வம், பேயைப் போன்றே தோன்றும்
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.-566
கடுஞ்சொல்லும், கருணையில் இல்லாதவன் செல்வம் நீடிக்காது
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.- 567
கடுஞ்சொல், நீதியிலா தண்டனை அரசனின் புகழை தேய்க்கும் அரம்
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.- 568
ஆலோசிக்காது முடிவெடுக்கும் வேந்தன் கோபம்
கொண்டு அழிவான்
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.- 569
முன்பே பாதுகாவல் செய்யாத வேந்தன் அஞ்சியே
அழிவான்
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.- 570
கொடுங்கோலாட்சி செய்யும் கல்லாதார் கூட்டமே, பூமிக்கு பெருஞ்சுமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக