வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 7 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 56. கொடுங்கோன்மை

 


கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.               551

துன்புறுத்தும் அரசன் கொலையாளியைவிடக் கொடியவன்

வேலோடு நின்றான் இடுவென் றுதுபோலும்

கோலோடி நின்றான் இரவு.                       552

மிரட்டிப் பணம் பறித்தால் அரசனும் கொள்ளைக்காரனே

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்.                    553

நாளும் ஆராய்ந்து மக்களைக் காக்காத அரசனால் நாடு அழியும்

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.                      554

கொடுங்கோலன் செல்வத்தையும், மக்களையும் ஒன்றாக இழப்பான்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.                  555

மக்களின் துன்பக்கண்ணீரே ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் 

மன்னர்க்கு மன்னுதல் செங்கோண்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி.               556

மன்னர்க்குப் புகழ் நல்லாட்சியால் மட்டுமே தோன்றும்   

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு.                  557

உயிர்களுக்கு மழைத்துளி போன்றவன் மக்களுக்கு நல்ல வேந்தன்

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்.                     558

கொடுங்கோலன் ஆட்சியில் செல்வந்தரே பெரிதும் வருந்துவர்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.                        559

தவறான ஆட்சியில் பருவமழையும் தவறிப் பொழியும்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.                        560

நீதி தவறிய ஆட்சியில், பால் வளமும், கல்வி வளமும் குறையும்       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக