ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. 541
குற்றத்தை ஆராய்ந்து யாரிடமும் நடுநிலையுடன்
வழங்குவதே நீதி
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி. 542
மக்கள் மன்னனையும், உயிர்கள் மழையையும் நம்பி வாழும்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543
அறவோர் நூலுக்கும், அறத்துக்கும் நல்லாட்சியே அடிப்படையாகும்
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. 544
மக்களைக் காக்கும் மன்னன் வழியில் நிற்கும் உலகம்
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. 545
நல்லாட்சியில் மழையும், விளைச்சலும் நன்றாக இருக்கும்
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். 546
படையால் கிடைப்பதைவிட நல்லாட்சியால் கிடைப்பதே
வெற்றி
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். 547
நீதி தவறாது ஆட்சி செய்தால் அந்த நீதியே
மன்னனைக் காக்கும்
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். 548
எளிமையும், நீதியும் இல்லாத மன்னன் ஆட்சி தானே அழியும்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். 549
நல்லவர்களைக் காத்து, தீயவரை தண்டித்தலே வேந்தன் கடமை
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். 550
தீயரை அழித்தல், களை எடுப்பதற்கு சமமானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக