பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 5 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 54 பொச்சாவாமை

 



இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு. - 531

பெருமகிழ்ச்சியில் தோன்றும் மறதி பெருங்கோபத்தைவிடத் தீது

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்பக் கொன் றாங்கு.- 532

வறுமை அறிவைக் கொல்வதுபோல, மறதி புகழைக் கொல்லும்  

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து

எப்பால்நூ லோர்க்கும் துணிவு.- 533

மறதியுடையவர்களுக்கு புகழ் கிடைப்பதில்லை

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு.- 534

பயமுடையவர்க்கும், மறதியுடையவர்க்கும் பாதுகாப்பார் பயனில்லை

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும்.- 535

வருமுன் காக்க மறந்தவன் தன் தவறுக்காக பின்னர் வருந்துவான்  

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அஃதுவொப்பது இல்.- 536

யாராக இருந்தாலும் மறதியின்றி இருத்தல் மிகச் சிறந்த பண்பு

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின். - 537

மறக்காமல், ஆர்வத்துடன் செய்பவர்க்கு எச்செயலும் மிக எளிது

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.- 538

நற்செயல்களை மறந்தார்க்கு ஏழ்பிறப்பும் உயர்வு இல்லை

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.- 539

தன்னை மறந்த மகிழ்ச்சியால் அழிந்தவரை மகிழும்போது நினை

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்.-540

எண்ணங்கள் வலிமையாக இருந்தால் இலக்கை அடைவது எளிது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக