பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 53 சுற்றம் தழால்

 


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள. - 521

வறுமையின்போதும் உடன் இருப்பவரே சுற்றத்தார்

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்.- 522

அன்பான சுற்றமே வளர்ச்சி பலவற்றுக்கும் துணையாகும்

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாத்

கோடின்றி நீர்நிறைந் தற்று.- 523

சுற்றமில்லாதான் செல்வம் கரையிலா குளம் நிறைந்தது போன்றது

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.- 524

செல்வம் பெற்றது சுற்றத்தைக் காப்பதற்கே

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும். - 525

ஈதல், இன்சொல் இரண்டும் உடையான் சுற்றம் சூழ வாழ்வான்

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்.-526

ஈகையுடன், சினமில்லாதவனுக்குப் பெருஞ்சுற்றம் கூடும்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள.- 527

காக்கையைப் போல சுற்றம் பகிர்ந்துண்பாருக்கே உயர்வு உண்டு 

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.- 528

தனித்தன்மை அறிந்த மன்னனிடம் சுற்றம் விரும்பி வாழும்

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.- 529

பிரிந்த உறவும் அதன் காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத் திருந்து எண்ணிக் கொளல்.- 530

நீங்கியவன் மீண்டும் தன்னிடம் வந்தால் ஆராய்ந்த பின் சேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக