தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.- 491
எந்த செயலையும் முடிவை அறிந்த பின் தொடங்கு
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.- 492
வலிமையாளருக்கும் பாதுகாப்பான இடம் முதன்மையானது
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.- 493
இடனறிந்து செயல்பட்டால் வெல்லாதவரும்
வெல்வர்
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.- 494
தக்க இடமறிந்து தாக்கினால் எதிரிகள் தோல்வியடைவர்
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.- 495
முதலையின் வலிமையும் அது வாழும் இடம்
சார்ந்தே அமையும்
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.- 496
தேர் கடலில் ஓடாது, படகு நிலத்தில் செல்லாது
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின்.- 497
இடமறிந்து செய்பவர் எதற்கும் அஞ்சவேண்டாம்
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.- 498
சிறுபடையும் இடமறிந்து போரிட்டால், பெரும்படையை வெல்லும்
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.- 499
சொந்தமண்ணில் யாரையும் வெல்வது அரிது
காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
வேலான் முகத்த களிறு. - 500
வலிய யானை சேற்றில் சிக்கினால், நரிகூட அதைக் கொல்லும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக