அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். - 441
அறனறிந்த மூத்த அறிவுடையாருடன் ஆராய்ந்து
நட்பு கொள்க
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். - 442
வந்த துன்பம் நீக்கி, துன்பம் வராமல் காப்பவரிடம் நட்பு பாராட்டு
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். - 443
அரிதினும் அரிதே, பெரியோரிடம் கொள்ளும் நட்பு
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. - 444
பெரியவர்களை சுற்றத்தாராக்குவது வல்லமையும்
தலைசிறந்தது
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். - 445
ஆராய்ந்து கூறும் அறிஞரை அரசனும் தேர்ந்து
கொள்வான்
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.- 446
பெரியவர்களின் துணையிருந்தால் எதிரிகளும்
அஞ்சுவா்
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்? - 447
தவறுகளைக் கடிந்து கூறும் பெரியோரால்
பகை அழியும்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். - 448
கடிந்து கூற மூத்தோர் இல்லாத அரசன் தானே
கெடுவான்
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.- 449
வணிகத்துக்கு முதலீடும், நிலைபேறுக்கு பெரியோரும் தேவை
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். - 450
பலரிடம் பகைகொள்வதைவிட, நல்லோர் நட்பை விடுதல் தீது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக