அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.- 421
துன்பத்தில் காக்கும் கருவி,எதிரிகளால்
அழிக்கமுடியாத அரண் அறிவு!
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. - 422
மனதை நல்வழியில் செலுத்துவதே அறிவு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. - 423
யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து
அறிவதே அறிவு
எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. - 424
எளிமையாகப் பேசி, நுட்பமாகக் கேட்டு அறிந்துகொள்வது அறிவு
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. - 425
உயா்ந்தோரிடம் பழகி, இன்ப, துன்பங்களைக்
சமமாகக் காண்
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. - 426
உயர்ந்தோர் வாழும் வழியில் வாழ்வதே அறிவு
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். 427
அறிவுடையோர் எதிர்காலத்தை அறிவா், பேதையா் அறியார்
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். - 428
அஞ்ச வேண்டிவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையோர்
செயல்
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.- 429
வருமுன்காப்பவர் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். - 430
அறிவே உடைமை, பிற உடைமைகள் மதிப்பில்லாதவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக