செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.- 411
செல்வங்களுள் உயர்ந்த செல்வம் கேள்விச்
செல்வமே
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.- 412
உயிர்வாழ வயிற்றுக்கும், சிறப்பாக வாழ செவிக்கும் உணவிடு
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.- 413
கேள்வியறிவுடையோர், தேவரோடு ஒப்பிட்டு நோக்கப்படுவா்
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.- 414
ஊன்றுகோல் போல துன்பத்தில், உதவுவது கேள்வியறிவே
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.- 415
சேற்றுநிலத்தில் ஊன்றுகோல் போன்றது சான்றோர்
வாய்ச்சொல்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.- 416
எவ்வளவு நல்லது கேட்கிறோமோ அவ்வளவு நல்லது
விளையும்
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.- 417
நுட்பமான கேள்வியறிவுடையவர் என்றும் அறிவுடன்
பேசுவா்
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.- 418
செவியின் கேட்புத்திறன், ஓசையல்ல, கேள்வியறிவே!
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயினராதல் அரிது.- 419
நல்ல கேள்வியறிவுடைரே, பணிவுடன் பேசுவா்
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். - 420
செவியின் சுவையறியாமல் வாழ்வதும் வாழ்க்கையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக