வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 23 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 42. கேள்வி

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.- 411

செல்வங்களுள் உயர்ந்த செல்வம் கேள்விச் செல்வமே

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப்படும்.- 412

உயிர்வாழ வயிற்றுக்கும், சிறப்பாக வாழ செவிக்கும் உணவிடு

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.- 413

கேள்வியறிவுடையோர், தேவரோடு ஒப்பிட்டு நோக்கப்படுவா்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.- 414

ஊன்றுகோல் போல துன்பத்தில், உதவுவது கேள்வியறிவே

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.- 415

சேற்றுநிலத்தில் ஊன்றுகோல் போன்றது சான்றோர் வாய்ச்சொல்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.- 416

எவ்வளவு நல்லது கேட்கிறோமோ அவ்வளவு நல்லது விளையும்

பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.- 417

நுட்பமான கேள்வியறிவுடையவர் என்றும் அறிவுடன் பேசுவா்

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.- 418

செவியின் கேட்புத்திறன், ஓசையல்ல, கேள்வியறிவே!

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயினராதல் அரிது.- 419

நல்ல கேள்வியறிவுடைரே, பணிவுடன் பேசுவா் 

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என். - 420

செவியின் சுவையறியாமல் வாழ்வதும் வாழ்க்கையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக