பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 40. கல்வி


 கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.- 391

கல், கசடறக் கல், கற்பவை கல், கற்றபின் நில், சூழல்களுக்குத் தக

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.- 392

எண்ணும்,எழுத்துமே வாழும் உயிர்களுக்குக் கண்கள் போன்றவை

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். - 393

கற்றோர் பெற்றதே கண்கள்,கல்லாதார் பெற்றதோ இரு புண்கள்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில். -394

மகிழும்படி கூடி, மனம் கலங்கப் பிரிதலே அறிவுடையோர் தொழில்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர். - 395

செல்வர் முன் வறியவர்போல பணிந்து கற்பதே சிறந்த கல்வி   

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு. - 396

மணற்கேணியில் நீர்போல, கற்க கற்க அறிவு வளரும்

யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு. - 397

கற்றவருக்கு எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் சிறப்பு

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. -398

இப்பிறவியில் கற்பது ஏழு பிறவிக்கும் உதவும்   

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார். -399

கற்றவர், கற்பிப்பவர் இருவருக்கும் இன்பம் கல்வியே

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை - 400

கல்வியே அழிவில்லாத செல்வம், பிற எல்லாம் செல்வமல்ல

 

1 கருத்து: