அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து. - 361
மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு ஆசையே
விதையாகிறது
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். - 362
ஆசையைத் துறப்பதே மீண்டும் பிறாவமலிருப்பதற்கான
வழி
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
ஆண்டும் அஃதொப்பது இல். - 363
ஆசையற்ற நிலையே பெருஞ்செல்வம், அதற்கிணை வேறில்லை
தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.-364
வாய்மையே தூய்மையான ஆசையின்மையை அடையும்
வழி
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.- 365
ஆசையை துறந்தவரே மெய்யான துறவியராவர்
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. - 366
ஒருவரை வஞ்சிப்பது ஆசையே, அதனால் ஆசைக்கு அஞ்சி வாழ்
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும். -367
ஆசையைத் துறந்தால் நல்வினை தானே வரும்
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். -368
ஆசை உண்டானால் துன்பம் மேலும்மேலும் வரும்
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். -369
பேராசையைத் துறந்தால் வாழ்வில் இன்பம்
விடாமல் தொடரும்
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.- 370
ஆசையற்ற நிலையே பேரின்ப நிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக