பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

திங்கள், 14 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 36. மெய்யுணர்தல்


 

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்

மருளான்ஆம் மாணாப் பிறப்பு. - 351

பொய்யானவற்றை மெய்யென்று உணர்வதே துன்பம் தரும் பிறப்பு

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசுஅறு காட்சி யவர்க்கு.- 352

மெய்யுணர்வாளர்களே அறியாமை இருள் நீங்கி இன்பம் பெறுவர் 

ஐயத்தின் நீங்கித் தௌந்தார்க்கு வையத்தின்

வானம் நணியது உடைத்து. - 353

மெய்யுணர்வு பெற்றுவிட்டால் வீடுபேறு அடைவது எளிது

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. - 354

புலனடக்கம் பெற்றாலும் மெய்யுணர்வு பெறாவிட்டால் பயனில்லை

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.- 355

எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்

கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றுஈண்டு வாரா நெறி. - 356

மெய்ப்பொருள் உணர்ந்தவரே மீண்டும் பிறவா வழியை அறிவா்

ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.- 357

மெய்ப்பொருளை உணர்ந்தவர்களுக்கு மறுபிறப்பு தேவையில்லை

பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்

செம்பொருள் காண்பது அறிவு. - 358

பிறப்பின் உண்மை நிலையை அறிவதே மெய்யறிவு 

சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்

சார்தரா சார்தரு நோய்.- 359

பற்றுகளைக் கடந்து உண்மையை உணர்ந்தார்க்கு துன்பமில்லை

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய். - 360

காமம், வெகுளி, மயக்கம் மூன்றையும் கடந்தவர்க்கு துன்பமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக