பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 10 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 32. இன்னா செய்யாமை

 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள். - 311

சிறந்த செல்வம் கிடைத்தாலும் பிறர்க்கு தீமை செய்யாதே

கறுத்துஇன்னா செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசுஅற்றார் கோள். - 312

தீமை செய்தவருக்கும் தீமை செய்யாதரே மாசற்றவர்

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.- 313

தீமை செய்தவருக்கே தீமை செய்தாலும் அது தீமையே

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல். - 314

தீமை செய்தவரும் வெட்கப்பட நன்மை செய்து விடு

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை.- 315

பிறர் துன்பத்தையும் தன்துன்பமாக நினைப்பதே அறிவின் பயன்

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.- 316

தீமையென நீ உணர்ந்ததை பிறர்க்குச் செய்யாதே

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்

மாணாசெய் யாமை தலை. - 317

எப்படியும், எப்போதும், யார்க்கும் தீமை செய்யாதே

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல். - 318

தான் பெற்ற துன்பத்தை பிற உயிர்க்கும் தருவது எதனால்?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.- 319

பிறர்க்கு முற்பகல் செய்யும் தீமை, நமக்கு பிற்பகல் தாமே வரும்

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோய்இன்மை வேண்டு பவர். - 320

இன்பமாக வாழ பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே நல்ல வழி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக