வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.- 291
நற்சொற்களே வாய்மை எனப்படும்
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். - 292
நன்மைக்காகப் பேசும் பொய்களும் வாய்மை
எனக் கருதப்படும்
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.- 293
மனமறிந்து பொய்கூறின் மனமே அவனைத் துன்புறுத்தும்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள்ளெல்லாம் உளன். - 294
உள்ளமறிய பொய் கூறாதவன், உலகத்தார் உள்ளத்தில் வாழ்வான்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.-295
தானம், தவத்தைவிட வாய்மை உயர்ந்தது
பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.- 296
உண்மையே புகழையும். அறத்தையும் கொடுக்கும்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.- 297
உண்மை பேசுவது அறம் செய்வதைவிட உயர்ந்தது
புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையான் காணப் படும்.-298
உண்மையால் அகமும், நீரால் புறமும் தூய்மையாகும்
எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.-299
சான்றோர்க்கு உண்மையே மெய்யான விளக்கு
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.-300
நான் கண்டவற்றுள் உண்மையைவிட உயர் அறம்
வேறில்லை
மிக அருமையான கருத்து விளக்கங்கள் ஐயா...
பதிலளிநீக்கு