தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். - 251
அருளுடையவன் புலால் உண்ணமாட்டான்
பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு. - 252
பொருளைப் போல அருளைக் காக்க புலாலை மறுத்து
வாழ்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.- 253
போராளியைப் போல புலால் உண்பவனும் அன்பில்லாதவன்
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல். - 254
கொல்லாமை அருள்! கொல்லுதலும், புலால் உண்பதும் பாவம்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. - 255
புலால் உண்ணாதவர் நரகம் செல்லமாட்டார்கள்
தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். - 256
யாவரும் புலால் மறுத்தால் கறிக்கடைகள்
இருக்காது
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின். - 257
புலால் இன்னொரு உயிரின் உடற்புண், அதை உண்பதை தவிர்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.- 258
அறிவுடையோர் உயிரைப் பிரிந்த ஊனை உண்ணமாட்டார்கள்
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.- 259
வேள்வி செய்வதைவிட ஊன் உண்ணாமை நன்று
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.- 260
கொல்லாதவனை, புலால் மறுத்தவனை உயிர்கள் வணங்கும்
Super
பதிலளிநீக்கு