அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.-241
பொருள் பெறுவது எளிது, அருள் பெறுவது அரிது
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை. - 242
ஆராய்ந்து நோக்கினாலும் அருளே வாழ்க்கைக்குத்
துணை
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.- 243
அருளுடையார் வாழ்வே சொர்க்கமாகும்
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயர் அஞ்சும் வினை.- 244
எவ்வுயிரையும் போற்றும் அருளுடையா் தம்
உயிர்க்கு அஞ்சார்
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலங் கரி.- 245
அருளுடையவருக்கு இவ்வுலகில் துன்பங்கள்
வராது
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். - 246
வாழ்க்கையின் பொருளை மறந்தவரே அருளற்றவராவார்
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. -247
இல்லறத்துக்கு பொருளும், துறவறத்துக்கு அருளும் தேவை
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.-248
இழந்தால் பெற இயலாதது அருள் மட்டுமே
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.-249
அருளற்றவன் அறம் செய்வது பேதையின் நூலறிவு
போன்றது
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.-250
எளியாரைத் துன்புறுத்தும்போது வலியவரை
நினைக்கவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக