2. கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம்
கற்பதை
மறப்பது. -ஆவ்பரி
3. மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது
- எமர்சன்
4. பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே
கல்வியறிவு பயன்படவேண்டும் -
பிளாட்டோ
5. இளமைக் காலத்தில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும் இறந்தவன்.
- யூரிபிடிஸ்
6. பொது அறிவு
இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத
பொது அறிவானது ஆயிரம் மடங்கு
சிறந்தது
- ராபர்ட் கிரீன் இங்கர்சால்.
7. எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தல் வளர்வது கல்வி. - ஜிவெனால்
8. சான்றோன் ஆக்காத கல்வி, சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும் - போலிங் புரூக்
9. கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். - ஜிக்ஜேக்ளர்
10. வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது! - பெர்னார்ட்ஷா
11. கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும்.
ஆனால்,
அது தரும் பழம் இனிப்பு
நிறைந்தது’. -அரிஸ்டாடில்
12. எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து - நாலடியார்.
13. கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல, அது சிந்ததிப்பதற்காக மூளையை
பயிற்றுவிப்பது. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
14. கண்டுபிடிப்பாளர்கள் சாதாரண மனிதர்களே. ஆனால் அவர்கள்
தாங்கள் கற்ற கல்வியை பற்றி அதிகம் கவலைப்படாதவர்கள். -சார்லஸ் எஃப் கெட்டரிங்
15. கல்வி என்பது வெறுமனே ஒரு வாளியை நிரப்பும்
விஷயமல்ல அது நெருப்பை பற்ற
வைக்கும் விஷயம் போன்றது - வில்லியம் பட்லர்
ஈட்ஸ்.
16. மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே,
உண்மையான கல்வி - காந்திஜி
17. கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று,
அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!
-எட்மண்ட்பர்க்
18. நல்ல கல்வி என்பது உடல், உள்ளம், ஆன்மா
ஆகிய மூன்றையும் ஒருமித்து
வளர்க்கவேண்டும்.-மகாத்மா காந்தி
19. அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கிக்கொள்ளப்
பயன்படும் கருவி கல்வி - யங்
20. பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது.
கல்வி ஆபரணமல்ல, ஆடை – போப்
21. பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல்
கல்வியினால்
ஆன்மா சிறப்படைகின்றது- ஜோசப் அடிசன்
22. கற்றறிந்த மனிதன் என்று யாருமில்லை.
கற்கும் மனிதர்கள்தான்
உள்ளனர் - மரேஷால்
23. நன்கு கற்றுணர்ந்த மனிதனே தன்னுடைய
அறியாமையைப்பற்றி அறிவான்-
விக்டர் ஹியூகோ.
24. எந்த சிறந்ததை நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள
வேண்டியிருந்ததோ அதையே கற்றுக்கொடுங்கள் -
ரிச்சர்ட் பாக்.
25. கற்பித்தலின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள
முடியும்
என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு - ஸ்டீபன் கோவே.
26. கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது.
ஏனெனில் அறியாமைதான் தீவினையின்
மூலவேர். -பிளேட்டோ.
27. கல்வியின் பெரிய நோக்கம் அறிவு அல்ல, செயல்.
-ஹெர்பர்ட் ஸ்பென்சர்
28. ஞானம் வயதிலிருந்து கிடைப்பதல்ல, கல்வி மற்றும் கற்றலிலிருந்து
வருகிறது. - அன்டன் செக்கோவ்
29. கல்வி என்பது வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல, கல்வியே வாழ்க்கையே.
- ஜான் டீவி
30. சுதந்திரத்தின் தங்கக் கதவைத் திறக்க கல்வி முக்கியமாகும்.
- ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
31. கல்வியின் நோக்கம் வெற்று மனதைத் திறந்த
மனதாக மாற்றுவதாகும் - மால்கம் ஃபோர்ப்ஸ்
32. கல்வி என்பது இருளில் இருந்து வெளிச்சத்திற்குச்
செல்வதாகும்- ஆலன் ப்ளூம்
33. ஒரு விதத்தில் - பொது அறிவு இல்லாமல் கல்வி
பெறுவதை விட கல்வி இல்லாமல் பொது அறிவு இருப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது. ராபர்ட்
ஜி. இங்கர்சால்
34. கல்வியின் மிக உயர்ந்த விளைவு சகிப்புத்தன்மை. - ஹெலன் கெல்லர்
35. எப்படிக் கற்றுக்கொள்வது என்பது வாழ்க்கையின்
மிக
முக்கியமான திறமை.- டோனி புசன்
36. கற்றலை நிறுத்தும் எவரும் வயதானவராகிவிடுவார்கள், இருபது வயதானாலும் எண்பது வயதானாலும். கற்றலைத் தொடரும் எவரும்
இளமையாக இருப்பார்கள். உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய
விஷயம். - ஹென்றி ஃபோர்டு
37. குறைவான கற்றல் ஒரு ஆபத்தான விஷயம்
- அலெக்சாண்டர் போப்
38. கற்பதை நிறுத்தாதீர்கள். நீங்கள் தினமும் ஒரு புதிய விஷயத்தைக்
கற்றுக்கொண்டால், உங்கள்
போட்டியின் 99% ஐ நீங்கள்
வெல்வீர்கள். - ஜோ கார்லோசோ
39. தொடர்ச்சியான கற்றல் என்பது எந்தவொரு
துறையிலும் வெற்றிபெற
குறைந்தபட்ச தேவை! - டெனிஸ் வெய்ட்லி
40. கற்றலின் அழகான விஷயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. பி.பி.
கிங்
41. நாம் கற்கவில்லை, நாம் கற்றல்
என்று அழைப்பது
நினைவுகூரும்
செயல் மட்டுமே. பிளேட்டோ
42. கற்றல் ஒருபோதும் பிழைகள் மற்றும் தோல்வி இல்லாமல்
செய்யப்படுவதில்லை. - விளாடிமிர்
லெனின்
43. வெற்றிக்கு எந்த ரகசியங்களும் இல்லை. திட்டமிடல்,
கடின உழைப்பு மற்றும்
தோல்வியிலிருந்து கற்றல் ஆகியவற்றின்
விளைவே
வெற்றி. - கொலின் பவல்
44. நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும், நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்! - மூர்
45. கல்விச்சாலையொன்று திறப்பவன்
சிறைச்சாலையொன்று மூடுபவன். -
விக்டர் ஹூகோ
46. முதலாவதாக மாணவன் தன் தாய்மொழியில் புரிந்து கொள்ளவும்.
பேசவும், படிக்கவும். எழுதவும் நாம்
கற்பிக்கவேண்டும். - எச். ஜி. வெல்ஸ்
47. ஒரு மாணவனிடம் மறைந்திருக்கும் உண்மையான
திறமை, அறிவு, ஆற்றல் சிந்தனை இவற்றை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியின் நோக்கமாக
இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, மாணவர்கள்
மண்டைகளில் பல கரடுமுரடான செய்திகளைத் திணிப்பது அல்ல கல்வி. -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
48. கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமன்று.
பட்டம் பதவிகளைக்
குறிக்கொண்டு படித்தலும் கல்வியாகாது. கல்வி என்பது அறியாமையை நீக்கி அறிவை
விளங்கச் செய்வது
- திரு. வி. கலியாணசுந்தரனார்
49. கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும்
செவிசாய்க்கும் திறன் - ராபர்ட் பிராஸ்ட்
50. நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை. - சுவாமி விவேகானந்தர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக