அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். -71
அன்பை அடைத்து வைக்கமுடியாது.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. - 72
அன்பிலாதவர்களுக்கே எல்லாம் சொந்தம்
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. - 73
உயிர்களுக்குள் உறவென்பது அன்பால் அமைவது-
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. - 74
அன்பு விருப்பத்தையும், விருப்பம் நட்பையும் வழங்கும்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. -75
அன்பான வாழ்வே மகிழ்வானவர்களின் வாழ்க்கைப்
பயன்
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. - 76
அறத்துக்கும், வீரத்துக்கும் அன்பே துணை
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். - 77
வெயிலில் இட்ட புழுபோல் அன்பில்லாதவர்கள்
வாடுவா்
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. -78
அன்பிலா உயிர் வாழ்க்கை பாலைவன மரம் தளிர்த்தது
போன்றது
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. - 79
பிற உறுப்புகளைவிட, உள்ளமே அன்பை நன்கு வெளிப்படுத்தும்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. - 80
அன்பே உயிர், மற்றது எலும்பாலான உடம்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக