பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 7. மக்கட் பேறு

 

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.                     61

உயர்ந்த பேறு அறிவுள்ள  குழந்தைகளே

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.                   62

நல்ல குழந்தைகளைப் பெறுபவர்களுக்குப் பழி தோன்றாது

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.                  63

அவரவர் செய்வினைக்கு ஏற்ப குழந்தைகள் பிறக்கும்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.                     64

தம் குழந்தையின் கையில்பட்ட உணவு அமுதைவிட இனியது

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.            65

குழந்தைகளின் தொடுதல் உடலுக்கும், பேச்சு செவிக்கும் இன்பம்

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.                 66

குழல், யாழைவிட தம் மழலைச் சொல்லே இனிது   

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பபச் செயல்.                    67

நல்லோர் முன் குழந்தையை முன்னிலைப்படுத்துவது தந்தையின் கடன்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.              68

தம்மைவிட அறிவுக்குழந்தைகளைப் பெறுதல் உலகிற்கே இனிது

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.                            69

தன் மகன் சான்றோன் என்ற போதே தாய் பெரிதும் மகிழ்வாள்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்.              70

தவப்புதல்வன் என்ற சொல்லே தந்தைக்கு மகிழ்வளிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக