ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. - 21
ஒழுக்கமானவர் பற்றிய நூலே நல்ல நூல்
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. - 22
துறவிகளின் பெருமையை எண்ணிவிடமுடியாது
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. - 23
இவ்வுலகம் துறவிகளையே போற்றும்
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. - 24
ஐம்புலன்களையும் அறிவால் அடக்கவேண்டும்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.- 25
ஐம்புலன்களை அடக்கியவர்களுக்கு இந்திரனே
சான்று
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.- 26
பண்பில் பெரியோரே செயற்கு அரிய செய்வர்
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி வான் கட்டே உலகு. - 27
ஐம்புலன்களை அடக்கியவரிடம், உலகம் அடங்கும்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். - 28
துறவிகளின் பெருமையை அவர்களின் மொழியே
காட்டிவிடும்
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.- 29
பக்குவப்பட்டவர்களின் கோபம் நெடுநேரம்
நிற்காது
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். - 30
அருள்தன்மை கொண்டவரே அந்தணர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக