வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. - 221
வறியவருக்கு வழங்குவதே ஈகை
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. - 222
பெறுதல் தீது. ஈதல் நன்று
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.-223
ஒருவன் நிலையறிந்து அவன் கேட்கும் முன்பே
கொடு
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. -224
இல்லாமையில் வாடியவர் இன்முகம் காணக்
கொடுப்பதே ஈதல்
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். -225
கொடுக்கும் பண்புடையவா் துறவிகளைவிட மேலானவா்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.- 226
பசித்தவருக்கு உணவளிப்பது ஒருவரின் மிகச்சிறந்த
சேமிப்பு
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.-227
வள்ளல் பசியால் என்றும் வாடும் நிலை வராது
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.-228
கொடுத்தலின் இன்பம் அறியாதவரே சேமித்துவைத்து
இழப்பா்
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.-229
தனித்து உண்பது பிச்சையெடுத்தலைவிட இழிவானது
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.-230
ஈகைப் பண்பில்லாத நிலை சாவினும் கொடியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக