என் ஆற்றுங் கொல்லோ உலகு.-211
கைம்மாறு கருதாதவா்கள் மழையைப் போன்றவா்கள்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. -212
முயன்று ஈட்டிய பொருள் யாவும் தகுந்தவா்க்கு
உதவுவதற்கே
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.-213
உதவும் மனநிலையைவிட உயா்ந்தது எவ்வுலகிலும்
இல்லை
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். -214
உதவி வாழ்பவனே உயிர்வாழ்பவனாகக் கருதப்படுவான்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.-215
பேரறிவாளனின் செல்வமானது ஊருணி நீர் நிறைந்தது
போன்றது
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.-216
பயன்தரும் பழமரம் பழுத்தது போன்றது நல்லவனின்
செல்வம்
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.-217
பெருந்தன்மையாளனின் செல்வம் மருந்துமரம்
போன்றது
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.-218
அறிவுடையவர்கள் இல்லாத காலத்தும் உதவவே
எண்ணுவா்
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.-219
உதவ இயலாத நிலையே உதவக்கூடியவனின் வறுமை
ஆகும்
ஒப்புரவினால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.- 220
உதவி செய்தலால் வரும் துன்பமும் வரவேற்கத்தக்கதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக