பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். - 191
பயனில்லாத சொற்களைக் கூறுபவனை யாவரும்
இகழ்வா்
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.-192
தீய செயலைவிடவும் தீமையானது பயனில்லாத
சொல்
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.- 193
பயனில்லாத பேச்சே ஒருவன் நயனில்லாதவன்
என்றுரைக்கும்
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. - 194
பயனும், பண்புமில்லாத சொற்கள் நன்மையைக் கெடுக்கும்
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.-195
பயனில்லாத சொற்கள் ஒருவரின் மேன்மையை
நீக்கும்
பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.-196
பயனில்லாத சொற்களைப் பேசுவோர் மனிதருள்
பதா் போன்றவா்
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. - 197
நயமிலாத சொல் பேசினாலும், பயனிலாத சொல் பேசாதே
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.- 198
அறிவுடையவா்கள் பயனில்லாத சொற்களைக் கூறார்
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். -199
மாசற்றவா்கள் பயனில்லாதவற்றைப் பேசமாட்டார்கள்
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். - 200
பயனுள்ள சொற்களைப் பேசி, பயனிலாச் சொற்களை தவிர்க்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக