வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. - 11
வானம், மண்ணுக்கு வழங்கும் அமுதமே
மழை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. - 12
உணவாகவும், உணவிற்கு அடிப்படையாவதும்
மழையே
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. -13
வான் மழை பொய்த்துவிட்டால், உயிர்கள்
பசியால் வாடும்
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால் - 14
மழை இல்லாவிட்டால் உழவும் இல்லை
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. -15
வாழ்வுக்கும், தாழ்வுக்கும் மழையே
முதன்மையாகிறது
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. -16
மழையின்றி, மண்ணில் பசும்புல்லைக்கூட
காணமுடியாது
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.-17
மழை இல்லையென்றால் நெடுங்கடலும்
வற்றிவிடும்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. - 18
மழை பொழியாவிட்டால், வானோர்க்கு பூசைகள்
கிடையாது
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். -19
தானம், தவம் இரண்டுக்கும் மழைவேண்டும்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. - 20
நீர் இன்றி இவ்வுலகமும், இவ்வுலகில் ஒழுக்கமும் இல்லை
அருமை உரை அழகு...
பதிலளிநீக்கு