நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். - 171
பிறா் பொருளை விரும்பியவனின் குடியும்கெட்டு
குற்றமும் சேரும்
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.- 172
நடுநிலையாளர் பிறா் பொருளை விரும்பாதவராவா்
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். - 173
அற இன்பம் பெரிதென உணா்ந்தவா் சிற்றின்பங்களை விரும்பார்
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். - 174
புலன்களை வென்றவா் வறுமையால் பிறா் பொருளை
விரும்பார்
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். - 175
பிறா் பொருளை விரும்பாமையல்லவா அறிவு
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். - 176
அருள்வழியென்பதே நல்வழி, பொருள் வழியே தீயவழி
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.- 177
தவறாக சேர்த்த செல்வம் தேவையான நேரத்தில்
பயன்படாது
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். - 178
செல்வம் குறையாமலிருக்க வழி பிறர்பொருளை
விரும்பாமை
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. - 179
பிறா்பொருளை விரும்பாதவரிடமே செல்வம்
தங்கும்
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. - 180
ஆசை அழிவின் வழி, ஆசையின்மையே வெற்றியின் வழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக