ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.- 131
ஒழுக்கம் சிறப்பு தருவதால், அது உயிரைவிடப் பெரிது
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. - 132
ஆராய்ந்து பார்த்தால் ஒழுக்கம் மட்டுமே
நமக்குத் துணை
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். - 133
ஒழுக்கமுடையவர்களே உயர்ந்த குடியினர்
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.- 134
வேதத்தை மறந்தாலும் ஒழுக்கத்தை மறக்கக்கூடாது
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.- 135
ஒழுக்கமே ஆக்கம் தரும், பொறாமை அழிவு தரும்
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.- 136
இழிவை எண்ணியே அறிவுடையோர் ஒழுக்கமாக
இருப்பர்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. - 137
ஒழுக்கம் புகழையும், ஒழுக்கமின்மை பழியையும் கொடுக்கும்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.- 138
நல்லொழுக்கம் நன்மையும், தீயொழுக்கம் துன்பமும் தரும்
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.-139
ஒழுக்கமுடையவர்கள் மறந்தும் தீய சொற்களைப்
பேசார்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். 140
ஒழுக்கமுடையவர்களுடன் சேர்ந்து வாழ்வதே
அறிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக