வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 19 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 12. நடுவு நிலைமை

 

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.- 111

அனைவரிடமும் நடு நிலையுடன் நடப்பவரே தகுதியுடையார்

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து.- 112

நடுநிலையாளர் செல்வம் வழிவழியாக வரும்

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.- 113

நீதி தவறி வந்த நிதியைப் பெறுவது தவறு

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.-114

ஒருவரின் தகுதியை அவரது புகழால் அறியலாம்

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி. - 115

நடுநிலைமையே சான்றோர்க்கு அழகுசெய்யும் அணிகலன்

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.- 116

நெஞ்சறிய நடுவுநிலை தவறினால் கெடுவாய் என்று உணர்

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.- 117

துன்பத்திலும் நடுவுநிலை தவறாதவர்களே மனசாட்சியாளர்கள்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.               118

துலாக்கோல் போல் இருப்பது சான்றோர்க்கு அழகு

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின். 119

மனசாட்சியே உண்மைக்கு அடிப்படையாகும்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோற் செயின். 120

பிறர் பொருளையும் தம்பொருளாக நினைப்பது வணிகர் கடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக