வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 11. செய்நன்றி அறிதல்

 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.- 101

நாம் உதவிசெய்யாதவர், நமக்கு உதவுவது மிக உயர்ந்தது

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.- 102

உரிய காலத்தில் செய்த உதவி உலகைவிட மிகப் பெரியது

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.- 103

பயன் எதிர்பார்க்காதார் செய்த உதவி கடலைவிட பெரியது

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வார் பயன்தெரி வார்.- 104

சிறு உதவியையும், பேருதவியாகக் கருதவேண்டும்

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.- 105

உதவியின் அளவு பெற்றவரின் மனநிலை சார்ந்தது

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.- 106

நல்லவர்கள், துன்பத்தில் உதவியவர்கள் நட்பை மறக்காதே

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.- 107

துன்பத்தில் உதவியவர்களை ஏழு பிறப்பிலும் நினைக்கவேண்டும்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.- 108

தீயதை மறந்து, நன்றி மறக்காமல் இருப்பது நன்று

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.- 109

பெருங்கேடு செய்தாலும் அவர் செய்த நன்மை எண்ணிப்பார்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.- 110

நன்றி மறந்தவர்க்கு உய்வே இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக