பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 30 மே, 2020

பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்


வணிகமொழி ஆங்கிலம் என்றால், சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால், இசையின் மொழி கிரேக்கம் என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மன், தூதின் மொழி பிரெஞ்சு என்றால் தமிழ் பக்தியின் மொழி என்றார் தனிநாயக அடிகளார்.

சங்க கால வழிபாடு
     சேர, சோழ, பாண்டிர் என மூவேந்தர்கள் ஆண்ட காலத்தை சங்க காலம் என்கிறோம். இக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களி முதன்மையனா பாடுபொருள் அகம், புறம் என காதலும் வீரமும் பேசப்படுகிறன்றன. என்றாலும் இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகளையும் அவ்விலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

என, தொல்காப்பியர் நிலங்களின் பிரிவையும் அவற்றிற்குரிய கடவுளரையும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
குறிஞ்சிக்கடவுளாக முருகப்பெருமானும், மருதநிலத்துக் கடவுளாக இந்திரனும், நெய்தலில் வருணனையும், பாலை நிலத்தில் கொற்றவையையும், முல்லை நிலத்தில் திருமால் எனப்படும் மாயோனையும் சங்க காலத்தில் மக்கள் வழிபட்டனர் என்பதை இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது. சங்கப்ப பாடல்களில் சிவன் என்னும் பெயர் இமல்லை. இருந்தாலும் தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன், முக்கட் செல்வன், கறை மிடற்று அண்ணல், நீலமணி மிடற்று அண்ணல், முழுமுதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், என சிவனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன


சங்க இலக்கியத்தில் கடவுள் வாழ்த்து தவிர எட்டுத்தொகைப் பாடல்களில், ஆங்காங்கே கடவுள் வழிபாடு பற்றிய குறிப்புகளைக் காணமுடிகிறது. பரிபாடலில்,
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.
சிறப்பாகக் கடவுளைப் போற்றும் மரபுகளைக் காண்கிறோம். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை முருகன் வழிபாடை சிறப்பாக எடுத்தியம்புகிறது.

சங்கம் மருவிய காலம்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றினர். தொண்டை நாடு பல்லவர் ஆட்சிக்குட்பட்டது. சங்க காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சமண, பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. துறவறத்திற்குப் பெருமை ஏற்பட்டது. வீடுபேறு குறித்த சிந்தனைகள் மேலோங்கின. இந்த இருண்ட காலப் பகுதியிலேயே வாழ்ந்த, காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகியவற்றை இயற்றினார். திருமூலர் திருமந்திரம் இயற்றினார். இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

பல்லவர் காலம் அல்லது பக்தி இலக்கிய காலம்

      களப்பிரர் காலத்திற்கு பிறகு சோழர் ஆட்சியில் கி.பி. 7, 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் ஆலயப்பணியே ஆண்டவன் பணி என்சிந்தனை மக்களிடையே ஏற்பட்டது. சங்க இலக்கியங்கள் காதலையும், அரசர்களின் வீரம் மற்றும் கொடையைப்  பாடின,  பக்தி இலக்கியங்கள் இறைவனையும் இறையடியாரையும் பாடின. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம்,   திருநீறில்லாத நெற்றி பாழ் என்னும் எண்ணம் மக்கள் மனத்தில் தோன்றியது. இலக்கியங்களின் பாடுபொருள் பக்தி சார்ந்து தோன்றியது.
சங்க காலத்தில் நிலம் சார்ந்த வழிபாட்டு மரபுகள், சமணம், பௌத்தம், கிறித்தவம், இஸ்லாம் என ஆட்சிகளுக்கு ஏற்ப மாற்றம் பெற்றது. சமயங்களின் பரப்பும் கருவியாக சமய இலக்கியங்கள் தோன்றின.  இலக்கியங்களில் நேரடியாகவும்  உள்ளீடாகவும் சமயம் சார்ந்த சிந்தனைகள் எழுந்தன. இவ்வாறு தோன்றி பக்தி இலக்கியங்களை,

சமயம் சார்ந்த இலக்கிய வளர்ச்சி

சைவ, வைணவத்தில் அதிகமான சமயம் சார்ந்த தமிழ் இலக்கியங்கள் தோன்றி. காப்பியங்கள், சிற்றியலக்கியங்கள், பிள்ளைத்தமிழ், உலா, மடல், திருமுறைகள், கம்பராமாயணம், மகாபாரதம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், கிறித்தவக் இலக்கியங்கள், இஸ்லாமியப் இலக்கியங்கள், பௌத்த இலக்கியங்கள் சமணக் இலக்கியங்கள், எனப் பக்தி இலக்கிய மரபு வளர்ச்சி பெற்றது.

பௌத்த பக்தி இலக்கியங்கள்

பௌத்த சமயத்தைக் கருத்துகளுடன் பௌத்த இலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன. அவற்றுள்,
1. மணிமேகலை, 2. குண்டலகேசி, 3. விம்பிசாராக்கதை, 4. அபிதர்மாவதாரம், 5. திருப்பதிகம், 6. சித்தாந்தத் தொகை
ஆகியன குறிப்பிடத்தக்கன. இவ்விலக்கியங்கள் புத்தமதக் கருத்துகளைபுத்த சமயத்திற்கு சமண வைதீக சமயங்களின் இருமுனைத் தாக்குதல் தொடர்ந்து இருந்து வந்தது. பௌத்தர்கள் தமது சமயப்பரப்புதலை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தனர். பௌத்த சமயப் பரப்புதலுக்கு ஏதுவாக சமய நூல்கள் மட்டுமே இயற்றினர். இக்காரணங்களால் புத்த சமயம் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்தது.

சமணமும் தமிழும்

கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரிய மன்னன் காலத்தில் வடஇந்தியாவில் சமணம் தோன்றியது. பத்திரபாகு என்னும் முனிவர் மூலம் சமணம் தமிழகத்தில் நுழைந்தது. மெல்ல மெல்ல சமணர்கள் அரசியல் செல்வாக்குப் பெற்றனர்.

சமண பக்தி இலக்கியங்கள்

சங்க கால உலோச்சரனார் சமணர் எனக் கருதுவர். கணியன் என்ற சொல்
சமணரைக் குறிக்கும் என்பார். நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனாரும் சமணரே அகப்புறப் பாடல்களில் ஒரு சிலவற்றில் சமண சமயக் கருத்துக்கள் உள்ளன. தொல்காப்பியரையும் திருவள்ளுவரையும் இளங்கோவடிகளையும் சமணர் என்று கருதுவர். பெருங்கதையும், சிந்தாமணியும், வளையாபதியும் ஐஞ்சிறு காப்பியங்களும் சமணக் காப்பியங்களாகும்.

சைவ சமய இலக்கியங்கள்

சிவனை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமான சைவசமயம் சார்ந்து எழுந்த இலக்கியங்கள் சைவ இலக்கியங்கள் எனப்படும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில் சிற்றிலக்கியம், பெருங்காப்பியம், எனப் பல சைவ இலக்கியங்கள் இயற்றப்பட்டன. கி.பி. 650 காலப்பகுதி தொடங்கி, 550 ஆண்டு காலம் தமிழ்மொழியைச் சைவ சமயமே செல்வாக்குப் பெற்றது.

பன்னிரு திருமுறைகள்
சைவ சமய இலக்கியங்களுள் பன்னிரு திருமுறைகள் குறிப்பிடத்தக்கன. அவை,
முதலாம் திருமுறை - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
இரண்டாம் திருமுறை -திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்  
மூன்றாம் திருமுறை     - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
நான்காம் திருமுறை  -திருநாவுக்கரசு நாயனார்    
ஐந்தாம் திருமுறை    -திருநாவுக்கரசு நாயனார்    
ஆறாம் திருமுறை    -திருநாவுக்கரசு நாயனார்    
ஏழாம் திருமுறை     -சுந்தரமூர்த்தி நாயனார்
எட்டாம் திருமுறை   -மாணிக்கவாசகர்
ஒன்பதாம் திருமுறை -(திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்
தேவர்,பூந்துருத்தி,நம்பிகாடநம்பி,கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்)
பத்தாம் திருமுறை    -திருமூலர்
பதினொன்றாம் திருமுறை - 12 ஆசிரியர்கள் 
பன்னிரண்டாம் திருமுறை  - சேக்கிழார் .

சைவ சித்தாந்த நூல்கள்
     பன்னிரு திருமுறைகளைப் போல சைவசமயக் கருத்துகளைப் பேசும் இலக்கியங்களாக சைவ சித்தாந்த இலக்கியங்கள் திகழ்கின்றன.
திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், உண்மைநெறி விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சங்கற்ப நிராகரணம்
பிற சைவ நூல்கள்
     தலபுராணங்கள், வீரசைவ நூல்கள் என சைவ சமய இலக்கியங்களின் வளர்சி இன்றும் தொடர்கிறது.

வைணவ சமய இலக்கியங்கள்

     திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயம் வைணவம் ஆகும். கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் தொகுத்தார்.

1.   பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி
2.   பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி
3.   பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி
4.   திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி
5.   நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி
6.   மதுரகவியாழ்வார் - கண்ணிநுண்சிறுத்தாம்பு
7.   குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி
8.   பெரியாழ்வார் -   திருப்பல்லாண்டு
9.   ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி
10.  தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
11.  திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான்[
12.  திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் சிறிய திருமடல், பெரிய திருமடல்

கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சி

கி.பி 15 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள்டேனீஸ்காரர்கள்பிரஞ்சுக்காரர்கள்ஆங்கிலேயர்ஐரோப்பியர் என இந்தியாவில் வணிகத்தின் பொருட்டு நுழைந்தவர்களால் கிருஸ்தவம் பரவியது.
இராபர்ட் டி நொபிலி
     தத்துவ போதக சுவாமிகள் (1577 - 1656) என அழைக்கப்படும் இராபர்ட் தெ நோபிலி அவர்கள் தமிழ்த்துறவி போலவே வாழ்ந்து கிறிஸ்தவ சமயத்தை வளர்த்தார். இவர், தமிழில் நாற்பது உரைநடை நூல்கள்மூன்று கவிதை நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றில் ஞானோபதேச காண்டம்மந்திர மாலைஆத்தும நிர்ணயம்தத்துவக் கண்ணாடிசேசுநாதர் சரித்திரம்ஞான தீபிகைநீதிச்சொல்புனர்ஜென்ம ஆக்ஷேபம்தூஷண திக்காரம்நித்திய சீவன சல்லாபம்கடவுள் நிர்ணயம்அர்ச். தேவமாதா சரித்திரம்ஞானோபதேசக் குறிப்பிடம்ஞானோபதேசம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
வீரமாமுனிவர்
வீரமாமுனிவரின் தேம்பாவணி கிறிஸ்தவ இலக்கியங்களுள் தலைசிறந்ததாகத் திகழ்கிறது. இவர் கித்தேரி அம்மானைஅடைக்கல மாலைஅடைக்கல நாயகிவெண் கலிப்பாஅன்னை அழுங்கல் அந்தாதிதேவாரம்கருணாம்பர பதிகம் ஆகிய படைப்புகளையும் வழங்கியுள்ளார்.
பிற அறிஞர்கள்
     சீகன் பால்குரேனியஸ்கால்டுவெல்எல்லீஸ்ஜியு.போப் எனப் பல தமிழறிஞர்களும் கிறிஸ்தவ சமயத்தை வளர்த்ததுடன் தமிழுக்கும் தொண்டாற்றியுள்ளனர்.
இசுலாமிய இலக்கிய வளர்ச்சி
இசுலாமிய சமயத்தவர்கள் இயற்றிய தமிழ் இலக்கியம் இசுலாமியத் தமிழ் இலக்கியம் எனப்படுகிறது. மதுரையைத் தில்லி சுல்தான் படைகள் 1311 ஆம் ஆண்டு கைப்பெற்றின. விஜயநகரப் பேரரசு இவர்களை 1371 ஆம் ஆண்டு தோற்கடித்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளை நவாப்புக்கள் 1690 - 1801 காலப்பகுதியில் ஆட்சி செய்தனர். தமிழ்நாட்டில் இசுலாம் பரவ இசுலாமிய ஆட்சி ஒரு முக்கிய காரணமாகும். இந்தப் பரவலால் இசுலாம் இலக்கியங்களும் தமிழில் பரவத் தொடங்கின.
உமறுப்புலவர் இயற்றிய சீறாப் புராணம் இசுலாம் இலக்கியத்தின் மணிமகுமடமாகத் திகழ்கிறது. கிசா, முனாசாத்து, நாமா, படைப்போர், மசாலா, மாலை, கண்ணி, திருமண வாழ்த்து, நொண்டி நாடகம் ஆகியன இசுலாமியர் தந்த தமிழ்க்கொடைகளாகும்.
1.இசுலாமியப் புலவர்களின் பாடல்கள்
·         அகமது மரைக்காயர் என்பவர் 1732ல் பாடிய பகுதி சின்னச்சீறா என்றழைக்கப்படுகிறது.
·         குணங்குடி மஸ்தான் (1785-1835) மெய்ஞ்ஞானப் பாடல்களைப் பாடும் சூபிப்புலவர் இவர் இவருடைய பால்கள் பட்டினத்தார், வள்ளலார், தாயுமானவர், பாடல்களுக்கு ஒப்பாக இலங்குகின்றது.நிராமயக்கண்ணி, பராபரக்கண்ணி, ரகுமான்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, முதலான பல பாடல்களபை; பாடியுள்ளார். பொதுவாக மஸ்தான் சாகிடின் பாடல்கள் முகியித்தீன் சதகம், அகத்தீசன் சதகம், கண்ணிப் பாடல்கள் என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
·         சேகணாப்புலவர் (புலவர் நாயகம்)
குணங்குடி மஸ்தானின் பள்ளித்தோழர் குத்பு நாயகம் என்னும் புராணம், திருமணிமாலை என்னும் காப்பியம், நாயைகந்தாதி, மக்காக்கலம்பகம், தோத்திரமாலை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
·         சவ்வாதுப்புலவர்
நாகைக்கலம்பகம், மதீனத்து, அந்தாதி மொஹைதீன் ஆண்டவர், பிள்ளைத்தமிழ் முதலான பல சிற்றிலக்கியங்களைப் பாடியுள்ளார். காளமேகப் புலவரைப் போல வசைபாடுவதில் பெயர் பெற்றவர் பண்டமிழ் ஜவ்வாது வாயெல்லாம் நஞ்சு என்றே இவரைக் குறிப்பிடுவர். பாடல்கள் புனைந்தே பெரும்பொருள் ஈட்டிய சிறப்பிற்கு உரியவர்.
·         வண்ணக்களஞ்சியப்புலவர்
வண்ணக்கசிகைள விரைந்து பாடும் ஆற்றலர் - ஆதலால் இவருக்கு இப்பெயர் சுலைமான் நடியன் வரலாற்றை இராசநாயகம் என்னும் பெயரில் காப்பியமாகப் பாடியுள்ளார். தீன்விளக்கம் என்ற நூலைப், படைத்துள்ளார்.
·         செய்குத்தம்பாவலர்
20ம் நூற்றாண்டின் சதாவதானி இவர் ஒரே சமயத்தில் நூறு நிகழ்வுகளைக் கவனகம் செய்யவல்லவர். சென்னை விக்டோரியா மண்டபத்தில் திரு.வி.க. முதலான சான்றோர் முன்னிலையில் நூறு கவனகம் செய்துகாட்டிச் சதாவதானி என்னும் பட்டம் பெற்றார்.
ஆறுமுகநாவலர், இராமலிங்க வள்ளலாரின் அருட்பாவை மருட்படா என வழக்கு தொடர்ந்த பொழுது துணிந்து அவருக்கு எதிர்க்குரல் கொடுத்தவர் இவரே. இதன் மூலம் வள்ளலாரின் பெருமையை நிலைநாட்டினார். நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருநாகூர்த் திரிபந்தறி, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தாந்தி, இன்னிசைப்பாமாலை, நீதிவெண்பா முதலான நூல்களை இயற்றியுள்ளார்


5 கருத்துகள்: