பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 29 மே, 2020

நீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

            எட்டுத் தொகையும், பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்கணக்கு நூல்கள் எனவும், அழைக்கபடுகின்றன. சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களை சேர்ந்த தொகுதி பதினெண்கீழ்கணக்கு நூல்கள் எனவும் நீதி நூல்கள், அற இலக்கியங்கள் என்றும் அழைக்கிறோம்.
பதினெண் கீழ்கணக்கு நூல்கள்
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.
 மேற்கண்ட தனிப்பாடல் 18 நூல்களையும் நினைவில்கொள்ளத் துணைநிற்கும்.
1 அகநூல்கள்
கார்நாற்பது - ஆசிரியர் – கண்ணங் கூத்தனார்
காலம் - கி.பி. 4ம் நூற்றாண்டு, பாடல்கள் - 40
திணை – அகத்திணை – முல்லைத் திணை, பாவகை - வெண்பா
கட்டமைப்பு
மழைக்காலத்தில் வினைக்காக (பொருள்தேடுதல், போர், தூது) தலைவன் பிரிதல், கார்காலத்தில் திரும்ப வருவேன் என அவன் உரைத்தல், கார்காலம் வருகை, தலைவன் பிரிந்ததிலிருந்து அவன் வரும் வரை கார்காலத்தில் தலைவி அவன் வருகையை எதிர்நோக்கித் தன் மனதை ஆற்றியிருத்தல். ஆகியன பாடலின் கட்டமைப்பாக அமைகின்றன. முல்லைத் திணைக்குரிய இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளை அடிப்படையாக்கொண்ட அகப்பாடலாக இப்பாடல் திகழ்கிறது
2. ஐந்திணை ஐம்பது - ஆசிரியர் - மாறன்பொறையனார்
காலம் - கி.பி.4ம் நூற்றாண்டு, பாடல்கள் - 50
திணை - ஐந்து அகத்திணைகளும்,
திணைவைப்புமுறை – முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
பாவகை - வெண்பா
கட்டமைப்பு
ஐந்திணைகளுக்கும் பத்துப்பாடல்கள் வீதம் 50 பாடல்கள் பாடப்பட்டதால் இவ்வாறு திணையை அடிப்டையாகக் கொண்டு பாடுவது ஐங்குறுநூற்றின் தாக்கம் என்றே கருதமுடிகிறது.
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.


3. ஐந்திணை எழுபது - ஆசிரியர் - மூவாதியார்
காலம் - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு, பாடல்கள் - 70
திணை - ஐந்து அகத்திணைகளும், பாவகை - வெண்பா
கட்டமைப்பு
·         தும்முதல்,  பெண்களின் இடக்கண் துடித்ல், ஆநதை அலறுதல், முதலான நிமித்தங்கள் நூலில் கூறப்பட்டுள்ளன.
·         நடுல் வழிபாடு, ஐம்படைத் தாலியைக் குழந்தைகளுக்கு அணிவித்தல் என்னும் பண்டைய பக்க வழக்கங்கள் கூறப்பெறுகின்றன.
·         நிமித்தங்களின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை ஐந்திணை எழுபது எடுத்தியம்பியுள்ளது.
4. திணைமொழி ஐம்பது - ஆசிரியர் – கண்ணஞ்சேந்தனார்
காலம் - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு, பாடல்கள் - 50
திணை - ஐந்து அகத்திணைகளும், பாவகை - வெண்பா
கட்டமைப்பு
திணைக்குப் பத்துப் பாடல்கள் வீதம் பாடப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலத்தில் பாயும் அருவியின் ஓசைச் சிறப்பை இசைக் கருவிகளோடு ஒப்பிட்டுக் கண்ணன் சேந்தனார் கூறுகின்றார்.
ஐங்குநுறூறு, ஐந்திணை ஐம்பது பாடல்கள் போலவே திணைப் பகுப்பிலான பாடல்கட்டமைப்பு குறிப்பிடத்தக்கது.
6. திணைமாலை நூற்றைம்பது - ஆசிரியர் - கணி மேதாவியார்
காலம் - கி.பி. 5ம் நூற்றாண்டு, பாடல்கள் - 150
திணை - ஐந்து அகத்திணைகளும், பாவகை - வெண்பா
கட்டமைப்பு
·         சமண சமயத்தவரான கணிமேதாவியார், களவியலை வெறுத்த சமணர்களும் இலக்கியச்சுவை கொள்ளுமாறு அகச்சுவைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
·         திணைமாலை ஐந்தும் நம் பதிலும் கடவுள் வணக்கப்பாடல் கூறும் செய்யுள் காணப்படவில்லை.
·         நூலில் வடசொற் கலப்பு மிகுதியாக உள்ளது.
·         கலித்தொகை போல் 150 செய்யுள் இந்நூலிலும் பாடப்பட்டுள்ளது. 
6. கைந்நிலை - ஆசிரியர் - புல்லங்காடனார்
காலம் - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு, பாடல்கள் - 60
திணை - ஐந்து அகத்திணைகளும், பாவகை - வெண்பா
கட்டமைப்பு
·         கை ஒழுக்கம், ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் கைந்நிலை எனப்பெயர் அமைந்துள்ளது. இப்பாடலில் வடசொற்கள் கலந்துள்ளன.
·         திணைக்குப் பன்னிரெண்டு பாடலக்ள் வீதம் ஐந்திணைக்கும் மொத்தம் அறுபது பாடல்கள் கைந்நிலையில் காணப்படுகின்றன. ஐந்திணைகளையும் அறுபது பாடல்களில் கூறும் கைந்நிலையை ஐந்திணை அறுபது எனக் கூறுவது பொருந்தும்.
இன்னிலை – கைந்நிலை
பதினெண் கீழ்க்கணக்குநூல்களுள் கைந்நிலை, இன்னிலை ஆகிய இரு நூல்களைப் பற்றி தெளிவற்ற நிலை நிலவுகிறது. இன்னிலை, கைந்நிலை என்பவை தனித்தனி நூல்களா? இன்னிலை சொல் என்பது காஞ்சிக்கு அடைமொழியா? இரண்டும் நூல்கள் ஆயின. அவை எங்கே? த்தகைய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இன்னிலை என்னும் நூலைப் பாடியவர் பொய்கையார் பதினெண்கீழ் கணக்கு நூல்களுள் ஒன்றாக இருக்குமோ என்கிறார் வ.உ.சி.
2. புறநூல்
7. களவழி நாற்பது - ஆசிரியர் - பொய்கையார்
பாடல்கள் – 40, திணை – புறத்திணை – வாகைத்திணை
பாவகை - வெண்பா
கட்டமைப்பு
களம் போர்க்களம். போர்க்களம் பற்றியய நாற்பது பாடல்களைக் கொண்ட நூல். என்பது பொருள். பதினெண் கீழ்க்கணக்கில் புறப்பொருள் சார்நத ஒரே நூல் இந்நூல் அமைகிறது.
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோன்றிய வென்றியும்
என்பது தொல்காப்பியம்
·         களவழி நாற்பது பாடலில் யானைப் போரே மிகுதியும் பாடப்பட்டுள்ளது. யானையின் வெட்டப்பட்ட துதிக்கையில் இருந்து குருதி கொட்டுகிறது.
·         களவழி நாற்பதில் „கார்த்திகைத் திருவிழா உவமிக்கப்பட்டுள்ளது. போரில் வீரர்கள் சிந்தும் குருதி கார்த்திகை விழாவில் ஒருங்கே தோன்றும் விளக்குத் தொகுதியின் செம்மையைப் போல் இருக்கிறது எனப் பொய்கையார் கூறுகின்றனார்
3. அறநூல்கள்
8. நாலடியார் - ஆசிரியர் – சமணமுனிவர்கள் - தொகுத்தவர் - பதுமனார்
பாடல்கள் – 400, வேறுபெயர்கள் - 1. நாலடி நானூறு 2. வேளாண்வேதம்
பொருள் – அறம், பாவகை – வெண்பா,
நாலடியார் சிறப்புகள்
1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்த நிலையில்
வைத்துப் போற்றப்படுகின்றது.
2. நாலடியால் ஆன பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல இருப்பினும் இந்நூல் மட்டுமே நாலடி எனச் சுட்டப்படுகிறது. ஆர் விகுதி பெற்று நாலடியார் என சிறப்பிக்கப்படுகிறது.
3. டாக்டர் ஜி.யு. போப் அவர்கள் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்துள்ளார்.
நாலடியார் தொடர்பான பழமொழிகள்
1. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
2. பழகு தமிழ்ச் சொல்லருமை நாலரண்டில் (நால் ஸ்ரீ நாலடியார்)
கட்டமைப்பு
நாலடியாரும ; திருக்குறளைப் போன்று அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என முப்பாலாகப் பகுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை அறங்களை நாலடியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை
ற்றிய கருத்துக்களை உரைக்கிறது.
9. நான்மணிக்கடிகை - ஆசிரியர் – விளம்பிநாகனார் (ஊர் – விளம்பி)
காலம் - கி.பி 4 ஆம் நூற்றாண்டு, பாடல்கள் - 2 + 104, பாவகை - வெண்பா
கட்டமைப்பு
நான்மணிக்கடிகையின் முதல் இரண்டு பாடல்கள் கடவுள் வணக்கமாகக்
காணப்படுகின்றன. நான்கு நான்கு கருத்துக்களைக் கொண்டு நூல் முழுவதும் பாடப்பட்டது போலக் கடவுள் வணக்க இரு பாடல்களும் திருமலைப்பறறிய நான்கு கருத்துக்ளைக் கொண்டுள்ளன. அழுக்குச் சேர்ந்தாலும் நான்மணி தன் பெருமையில் குறையாது. கழுவி எடுத்துக் கொண்டாலும் இருப்பினில் அழுக்கு சேரும் கீழ் மக்களிடம் அன்பு காட்டி புத்திமதி கூறினாலும் தம்முடைய கீழ்மைக் குணத்தை வெளிப்படுத்தி விடுவர் இவ்வழகிய கருத்தை,
மாசுபடினும் மணி தன் சீர் குன்றாதாம்
பூசிக் கொளினும் இரும்பின் கண் மாசுலுட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை
மாசுடைமைக் காட்டிவிடும்.
என்னும்பாடல் (100) எடுத்துரைக்கின்றது
10. இன்னாநாற்பது - ஆசிரியர் - கபிலர்
காலம் - கி.பி 50 முதல் 125 - பாடல்கள் - 1 10 40 - பாவகை - வெண்பா
கட்டமைப்பு
முதற்பாடல் கடவுள் வாழ்த்தாகக் கபிலர் அமைத்துள்ளார். இதில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை இன்னா என்று கடவுள் வாழ்த்தில் குறித்துள்ளார். வாழ்வியலுள் காணப்படும் துன்பங்களின் மூலங்கள் இவை எனக் கண்டு அவற்றைத் தொகுத்துக் கூறியிருக்கும் புதுமரபு தமிழிலக்கியத்தின் புதிய போக்காக உள்ளது.
11. இனியவை நாற்பது - ஆசிரியர் பூதஞ்சேந்தனர்
காலம் - கி.பி. 5ம் நூற்றாண்டு - பாடல்கள் - 1 10 40 - பாவகை - வெண்பா
கட்டமைப்பு
வாழ்க்கைச் சோலையின் இன்பமூலங்கள் இவை இவை எனக்கண்டு அவற்றைத் தொகுத்ரைக்கும் இனியவை நாற்பதின் மரபு இன்னா நாற்பதின் தொடர்ச்சியாக உள்ளது. இனியவற்றைக் கூறும் 40 பாடல்களுக்கான கடவுள் வாழ்த்திலும்,
கண்மூன்று உடையான்தாள் சேர்தல் கடிது இனிதே
தொன்மாண் துழாய்மாலை யானைத் தொழிலினிதே.
என்னும் முறையில் இனியவற்றைக் கூறும் இயைபு ஒழுங்கு போற்றற்றாது. சிவன், திருமால், பிரமன் மூவரையும் கூறும் பூதஞ்சேந்தனார் சமயப்பொதுமையாளராகத் திகழ்கிறார்.
12. திருக்குறள் - ஆசிரியர் - திருவள்ளுவர்
வள்ளுவரின் வேறு பெயர்கள்
1. தெய்வப்புலவர் 2. நாயனார் 3. முதல்புலவன் 4. பெருநாவலர்
5. செந்நாப்போதார் 6. மாதானுபங்கி
குறளின் வேறுபெயர்கள்
1. திருவள்ளுவம் 2. தமிழ்மறை 3. பொதுமறை 4. முப்பால்நூல்
5. பொய்யாமொழி 6. தெய்வநூல் 7. வாயுறை வாழ்த்து 8. உத்தரசேதம்
பாவகை: குறள்வெண்பா
பெயர்க்காரணம் : குறள் வெண்பாக்களால் பாடப்பெற்றமையால் திரு சேர்த்து திருக்குறள் என்றானது.
குறள்: குறுகிய வடிவினை உடையது. முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் பெற்று குறுகிய வடிவினைக் கொண்டு இருப்பதால் குறள் எனப்படுகிறது.
திருக்குறளுக்கு பல உரைகள் எழுந்துள்ளன. திருக்குறள் கருத்துக்கள் பல சங்க இலக்கியக் கருத்துககளுடன் காணப்படுகிறது. குறுந்தொகை, நற்றிணை, முதலான சங்க இலக்கியங்களில் தொடரும் கருத்துக்களும் கையாளப்பட்டுள்ளன.
பொருந்தும் உண்மைகளைத் திருக்குறள் கூறுகின்றது. இந்திய மொழிகள் பலவற்றுள் மொழியாக்கம் பெற்றுள்ளது. மராத்தி, வடமொழி, குஜராத்தி, பெங்காலி மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளது. வில்தொறும் நயம்தரும் நூல்! நுண்ணிய நூல்! மெய்ப்பொருள் காட்டும் நூல்! அற்றம் காக்கும் நூல்! அறிதோறும் அறியாமை காட்டும் நூல்! தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்ற நூல்! வருமுன்னர் காக்கும் நூல்! மெய்வருத்தக் கூலிதரும் நூல்! நுண்மாண் நுழைபுலம் தரும் நூல்! புகழொடு தோன்றிய நூல்! தனக்குவமை இல்லாத நூல்! கேட்டார்ப் பிணிக்கும் நூல்! நா நலம் தரும் நூல்! இடுக்கண் களையும் நூல்! என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நூல் திருக்குறள்.
13. திரிகடுகம்  - ஆசிரியர் - நல்லாதனார்
காலம் - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு, பாடல்கள் - 1 10 100, பாவகை - வெண்பா
பெயர்க்காரணம்: சுக்கு + மிளகு+ திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பன. அதனைப் போன்று அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் சுட்டியுள்ள மும்மூன்று கருத்துக்களும், உள்ளத்தின் நோயைப் போக்க வல்லன. எனவே இந்நூல் திரிகடுகம் எனப்படுகின்றனது.
முதற்பாடல் நூலின் கடவுள் வாழ்த்தாக அமைந்து திருமாலைப் போற்றுகின்றது.
14. ஆசாரக்கோவை -ஆசிரியர் - பெருவாயில் முள்ளியார்
காலம் - கி.பி. 5ம் நூற்றாண்டு - பாடல்கள் - 100
பாவகை - பல்வேறு வெண்பா வகைகள்
பெயர்க் காரணம் :
சாரம் என்றால் ஒழுக்கம் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டிய ஆசாரங்களைக் கோவைப் படுத்திக் கூறுவதால் ஆசாரக்கோவை எனப்படும்.
கட்டமைப்பு
நீராடல், ஆடை அணிதல், உணவு கொள்முறைமை, உண்ணும் திசை வாயைத் தூய்மை செய்யும் வகை, நீர் பருகும் முறை, தூங்கும் முறை முதலான கொள்ளத்தக்க ஒழுக்கங்களை முள்ளியார் கூறுகின்றார். எச்சியுடன் செய்யத்தகாதவை, நின்று கிடந்து உண்ணாமை, அந்திப் பொழுது செய்வன, தவிர்வன, சிந்திக்கலாகாதவை எனத ஒழுக்கங்கள் விரிவாகப் பேசப்படுகின்றன
15. பழமொழி - ஆசிரியர் - முன்றுறையரையனார்
காலம் - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு, பாடல்கள் – 400, பாவகை - வெண்பா
பெயர்க்காரணம் :
ஒவ்வொரு பாடலிலும் முடிவில் ஒரு பழமொழி சுட்டப்படுவதால் பழமொழி என்றும் 400 பாடல்களைக் கொண்டதாதல் பழமொழி 400 என்றும்  பெயர்பெற்றது.
கட்டமைப்பு
மக்கள் வழக்கில் உள்ள பழமொழிகளோடு இலக்கிய வழக்குப் பழமொழிகளும் உலக வழக்குப் பழமொழிகளும் கலந்து பழமொழி நூலில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டு மன்னர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் நூலுள் கலந்துள்ளன வரலாற்றுச் செய்திகளும் காணப்படுகின்றன. புராணச் செய்திகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. மரபுக் குறிப்புகளும் விரவி உள்ளன.
பாம்பறியும் பாம்பின் கால், குன்றில் மேல் இட்ட விளக்கு
ற்றலின் கேட்டலே நன்று ஆகியன சான்றுகளாகும்.
16. சிறுபஞ்ச மூலம் - ஆசிரியர் - காரியாசான்
காலம் - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு, பாடல்கள் - கடவுள் வாழ்த்து 1
பாயிரங்கள் 2, சிறுபஞ்சமூலச் செய்யுட்கள் 102, பாவகை - வெண்பா
பெயர்க்காரணம் : ஐந்து எளிய வேர்மூலங்களைக் கொண்டது சிறுபஞ்சமூலம் எனப்படும். பஞ்சமூலம் என்பதற்குப் பதார்த்த குணசிந்தாமணியும் பொருள் தொகை நிகண்டும் பின்வருமாறு பொருள்
தருகின்றன. சிறுபஞ்ச மூலமாவன.
1. சிறுவழுதுணைவேர், 2. கண்டங்கத்திரிவேர், 3. நெருஞ்சி வேர்
4. சிறுமல்லி வேர், 5. பெருமல்லி வேர் என்பன.
சிறுபஞ்சமூலத்தின் உள்ளடக்கம்,
சிறுபஞ்ச மூலப் பாடல்கள் ஒவ்வொன்றும் கற்கண்டாக இனிக்கின்றன. யாரையும் ஏளனமாக நினைக்கக்கூடாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது என்பதனை ஒரு பாடல்
குறிக்கின்றது.
17. முதுமொழிக்காஞ்சி : ஆசிரியர் - மதுரைக் கூடலூர்க் கிழார்
காலம் - கி.பி. 5ம் நூற்றாண்டு, பாடல்கள் – 100, பகுப்புமுறை - அதிகாரங்களுக்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்து அதிகாரங்கள் பகுக்கப்பட்டுள்ளன. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. அவை,
1.   சிறந்த பத்து
2.   அறிவுப் பத்து
3.   பழியாப் பத்து
4.   துவ்வாப் பத்து
5.   அல்ல பத்து
6.   இல்லைப் பத்து
7.   பொய்ப் பத்து
8.   எளிய பத்து
9.   நல்கூர்ந்த பத்து
10. தண்டாப் பத்து
பெயர்க்காரணம் : முதுமொழி – மூத்தோர் சொல் - காஞ்சி – மகளிர் இடையணி, மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
அதிகாரத் தொடக்கம் :
வ்வொரு அதிகாரத்திலும் முதல்பாட்டின் முதல்வரி “ஆர்கலி உலகத்து மக்கட்குஎல்லாம் எனத் தொடங்குகின்றன. மற்றபடி அனைத்துப் பாடல்களும் ஒவ்வொரு வரியினைக் கொண்ட பாடல்களாக உள்ளன.
18. ஏலாதி - ஆசிரியர் - கணிமேதாவியார்
காலம் - கி.பி. 5 ஆம் நூற்றாண்டு - பாடல்கள் - பாயிரம் 1 தற்சிறப்புப் பாயிரம் 1 செய்யுட் பாடல்கள் 80 - பாவகை - வெண்பா
ஏலம் - 1ங்கு, லவங்கப்பட்டை - 2ங்கு
மிளகு - 4ங்கு, திப்பிலி - 5ங்கு, சுக்கு - 6ங்கு
என ஏலம் முதலான ஆறு பொருள்களையம் பொடி செய்த மருந்துக் கலவைக்கு ஏலாதி என்று பெயர். இந்த ஆறு மருந்துகளும் சேர்ந்து உடலுக்கு நன்மை விளைவிக்கும். அதுபோல் உள்ளத்திற்கும் உறுதிசேர்க்கும் ஆறு நிலை பேறுடைய கருத்தியல்களை ஒவ்வொரு பாடலும் கூறுவதால் இந்நூலுக்கு ஏலாதி என்று பெயர்.
பிற அற நூல்கள்
ஒளவையார் நீதி நூல்கள் :
1. த்திசூடி, 2. கொன்றை வேந்தன், 3. மூதுரை (வாக்குண்டாம்)
4. நல்வழி, என்னும் நான்கு நூல ;களும் ஒளவையாரின் நீதிநூல்கள் ஆகும். ஒளவையார் பலர் இந்நீதி நூல்களைப் பாடிய ஒளவையார் சோழர் காலத்தவர். கி.பி. 12ம் நூற்றாண்டினர் என்பார் மு.அருணாசலம் அவர்கள்.
1. ஆத்திசூடி (கி.பி.12) :
109ரு வரிப் பாக்கள் கொண்டது. அகர நிரல் கொண்டு எழுதப்பட்ட முதல்
இலக்கியம் மற்றும் நீதிநூல் இது. இனிமை, எளிமை, கருத்தாழம் மிக்க பாடல்கள் அனைவர் மனதிலும் பசுமரத்தாணி போலப் பதிந்து கிடக்கும் புகழ்பெற்றது.
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
என அறக்கருத்துக்களை எடுத்துரைக்கின்றது.
2) கொன்றை வேந்தன் (கி.பி. 12) :
கொன்றை வேந்தனும் அகர நிரல் அமைப்பினைக் கொண்டுள்ளது. 91ற்றை வரிப்பாக்கள் அமைந்தது.
அன்னையம் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
என எளிமையும் இனிமையுமாக நீதிகளை ஒளவையார் எடுத்துரைக்கின்றார்.
3. மூதுரை (கி.பி. 12): (வாக்குண்டாம்)
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் என மூதுரையின் கடவுள் வாழ்த்து
தொடங்குகிறது. வாக்குண்டாம் எனத் தொடங்குவதால் மூதுரைக்கு வாக்குண்டாம் என்றும் பெயர் வந்தது. கடவுள் வாழ்த்தாகத் துப்பார் திருமேனி தும்பிக்கையான் என விநாயகரை வணங்கும் பழக்கத்தை ஒளவையாரிடம் காண்கிறோம் கடவுள் வாழ்த்து நீங்கலாக 30 வெண்பாக்கள் உள்ளன.
பயன்கருதாது செய்யும் உதவிக்குத் தென்னை மரத்தை உவமிக்கின்றார். இதனை,
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங ;கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்
4. நல்வழி (கி.பி 12)
பாலும் தெளிதேனும் பாகும் பகுப்பும் எனத் தொடங்கும் புகழ்பெற்ற பாடல் கடவுள் வாழ்த்தாக உள்ளது. கோலம் செய் துங்கக்கரி முகத்துத் தூமணியே என விநாயகர் வணக்கம் கடவுள் வாழ்த்தாக அமைகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 வெண்பாக்கள் உள்ளன.
ஈயாமையின் இழிவு பேராசை கூடாது. உழவின் உயர்வு. தீவினையே வறுமைக்கு வித்து முதலான பல அறங்கள் கூறப்படுகின்றன.
5. அறநெறிச் சாரம் (கி.பி.13)
ஆசிரியர் முனைப்பாடியார் கடவுள் வாழ்த்துடன் 226 வெண்பாக்கள் உள்ளன. சமண சமய நூலாகும். பொது நீதிகளை மிகுதியாகப் பேசுகின்றது.
மின்னும் இளமை உதாம் என மகிழ்ந்து
பின்னை அறிக என்றல் பேதைமை
எனவே நிலைமையயை உணர்ந்து அறம் செய்க என்று நீதி நவலிகின்றது.
6. வெற்றி வேற்கை (அ) நறுந்தொகை (கி.பி.16) :
ஆசிரியர் அதிவீரராமபாண்டியர். கடவுள் வாழ்த்தாக ஜங்கரனை (விநாயகர்) கூறுகிறார். கடவுள் வாழ்த்தாக உள்ள இருவரிகளில் பிரணவம், சரணம், அற்புதம் என்னும் மூன்று வடசொற்கள் காணப்படுகின்றன.
ஆசிரியரே தம் நூலை வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை என்றும்  குறிப்பிட்டுள்ளார். 82 பாடல்கள் உள்ளன.
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் (1) என்னும் புகழ்வாய்ந்த பாடல் வெற்றி வேற்கையின் சீர்மை சாற்றும் அழகு எனப் பல பாடல்கள் தொடர்கின்றன.
7) நீதிநெறி விளக்கம் ஃ கி.பி. 17:
ஆசிரியர் குமரகுருபரர் கடவுள் வாழ்த்தில் உலகப் பொதுமையில் எம்பிரான் என்று சுட்டுகின்றார். 102 வெண்பாக்கள் கொண்டது.
கல்வி, சொல்வண்ணம், பணிவுடைமை, ஆறுந்திறமை, வரி கொள்ளும் முறை, செங்கோன்மை, அமைச்சர் கடமை, நட்பு, மெய்யுணர்வு, வீடுபேறு முதலிய பல பொருண்மைகளில் குமரகுருபரர் விளக்கியுள்ளார்.
8. நன்னெறி (கி.பி. 17):
ஆசிரியர் துறைமங்கலம் சிவப்பிரகாசர். 17 ஆம் நூற்றாண்டு.
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிகொடி
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே
என்ற பாடல்,  வழிபடு கடவுள். நூலின் பெயர், பாடல் எண்ணிக்கை ஆகிய செய்திகள் அனைத்தையும் சுட்டும்
9. உலகநீதி: (கி.பி. 18)
ஆசிரியர் உலகநாதன் 13 ஆசிரிய விருத ;தங்களைக் கொண்டுள்ளது. உலகநீதி புராணம் என்று ஆசிரியர் தமது நூலின் பெயரைக் குறிப்பிட்டு விநாயகர் வாழ்த்தாகக் கடவுள் வணக்கத்தை அமைத்துள்ளார்.
ண்சீர் ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ள உலக நீதியில் 4-ஆம் ஆம்சீர்கள்
வேண்டாம் என முடிகிறது. ஒவ்வொரு பாடலின் ஈற்று மூன்று சீர்களும் வாழ்த்தாய் நெஞ்சே. (அ) கூறாய் நெஞ்சே என முடிகிறது. 11, 13 ஆம் பாடல்களில் இம்முறை மாறுகிறது.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம
என்னும் புகழ்பெற்ற தொடர்கள் உலகநாதரின் பதிவாகத் திகழ்கின்றன.
10) நீதி நூல் (கி.பி.19) :
ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள். பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் முதல் தமிழ்ப் புதினத்தைத் தந்தவர். காலம் 1826-1889 இந ;நூலுக்கு மகாவித்துவான்மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் ஆசிரியப்பாவால் ஆன 187 வரிகள் கொண்ட சாற்றுகவி ஒன்றனைத் தந்துள்ளார்.
தெய்வம், மன்னன், ஆசிரியன்,  மக்கள், பெண்கள், உடன்பிறந்தார். பொய், களவு, கொலை, சூது, மது, கைக்கூலி (இலஞ்சம்) சோம்பல், சினம்,பொறாமை, மீதூண், தற்புகழ்ச்சி நிலையாமை முதலான பலப்பல வாழ்யவியல் நீதிகளை மாயூரம் வேதநாயகர் விரிவாக விளக்குகினறார். கணவன் மனைவியர் இயல்பு பற்றி மட்டும் 48 பாடல்களில் பாடியுள்ளார்.
பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மை போல்
செயிர்உள நீதியைச் சிதைத்தோர் தீயன்சாண்
வயிறினை வளர்த்திட ஆங்கு மாநிதி
வெயிலுறு வெண்ணணெய் போல் விளியும் உண்மையே
11. புதிய ஆத்திசூடிகள் கி.பி. 20)
ஒளவையார் பாடிய ஆத்திசூடியை அடியொற்றிப் பல புதிய ஆத்திகடிகள் தமிழில் தோன்றி உள்ளன. ஆத்திசூடி இலக்கியம் எனத் தனியொரு வகைமையாக இனம் காணக்கூடிய அளவில் பல ஆத்திசூடிகள் தமிழ் உள்ளன.
பாரதியார் - புதிய ஆத்திசூடி
பாரதிதாசன் - ஆத்திசூடி
வ.சு.ப.மாணிக்கம் - தமிழ்சூடி
ந.ரா.நாச்சியப்பன் – நெறிசூடி
ச.மெய்யப்பன் - அறவியல் சூடி
தமிழண்ணல் – ஆய்வுசூடி
புலவர் சோ.ம. இளவரசு - நீதிசூடி
என காலந்ததோறும் தமிழில் நீதி இலக்கிய மரபு தொடர்கிறது. 

1 கருத்து:

  1. நீதி நூல்கள் குறித்துநல்லதொகுப்பு.
    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் மட்டும் கி.மு.முதல்நூற்றாண்டுநூல்ஆக உள்ளது.மற்றவை பிற்காலநூல்களாக ளாகவும்கி.பி.5ஆம்நூற்றாண்டுநூல்களாகவும் உள்ளன.ஆகவே திருக்குறளை சங்ககாலநூலாக தமிழ்கூறும்நல்லுலகம் ஏற்கவேண்டும்.
    அ.இருளப்பன்

    பதிலளிநீக்கு