வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 30 மே, 2020

பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்


வணிகமொழி ஆங்கிலம் என்றால், சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால், இசையின் மொழி கிரேக்கம் என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மன், தூதின் மொழி பிரெஞ்சு என்றால் தமிழ் பக்தியின் மொழி என்றார் தனிநாயக அடிகளார்.

சங்க கால வழிபாடு
     சேர, சோழ, பாண்டிர் என மூவேந்தர்கள் ஆண்ட காலத்தை சங்க காலம் என்கிறோம். இக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களி முதன்மையனா பாடுபொருள் அகம், புறம் என காதலும் வீரமும் பேசப்படுகிறன்றன. என்றாலும் இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகளையும் அவ்விலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

என, தொல்காப்பியர் நிலங்களின் பிரிவையும் அவற்றிற்குரிய கடவுளரையும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
குறிஞ்சிக்கடவுளாக முருகப்பெருமானும், மருதநிலத்துக் கடவுளாக இந்திரனும், நெய்தலில் வருணனையும், பாலை நிலத்தில் கொற்றவையையும், முல்லை நிலத்தில் திருமால் எனப்படும் மாயோனையும் சங்க காலத்தில் மக்கள் வழிபட்டனர் என்பதை இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது. சங்கப்ப பாடல்களில் சிவன் என்னும் பெயர் இமல்லை. இருந்தாலும் தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோன், முக்கட் செல்வன், கறை மிடற்று அண்ணல், நீலமணி மிடற்று அண்ணல், முழுமுதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், என சிவனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன

வெள்ளி, 29 மே, 2020

நீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

            எட்டுத் தொகையும், பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்கணக்கு நூல்கள் எனவும், அழைக்கபடுகின்றன. சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களை சேர்ந்த தொகுதி பதினெண்கீழ்கணக்கு நூல்கள் எனவும் நீதி நூல்கள், அற இலக்கியங்கள் என்றும் அழைக்கிறோம்.
பதினெண் கீழ்கணக்கு நூல்கள்
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.
 மேற்கண்ட தனிப்பாடல் 18 நூல்களையும் நினைவில்கொள்ளத் துணைநிற்கும்.
1 அகநூல்கள்
கார்நாற்பது - ஆசிரியர் – கண்ணங் கூத்தனார்
காலம் - கி.பி. 4ம் நூற்றாண்டு, பாடல்கள் - 40
திணை – அகத்திணை – முல்லைத் திணை, பாவகை - வெண்பா
கட்டமைப்பு
மழைக்காலத்தில் வினைக்காக (பொருள்தேடுதல், போர், தூது) தலைவன் பிரிதல், கார்காலத்தில் திரும்ப வருவேன் என அவன் உரைத்தல், கார்காலம் வருகை, தலைவன் பிரிந்ததிலிருந்து அவன் வரும் வரை கார்காலத்தில் தலைவி அவன் வருகையை எதிர்நோக்கித் தன் மனதை ஆற்றியிருத்தல். ஆகியன பாடலின் கட்டமைப்பாக அமைகின்றன. முல்லைத் திணைக்குரிய இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளை அடிப்படையாக்கொண்ட அகப்பாடலாக இப்பாடல் திகழ்கிறது
2. ஐந்திணை ஐம்பது - ஆசிரியர் - மாறன்பொறையனார்
காலம் - கி.பி.4ம் நூற்றாண்டு, பாடல்கள் - 50
திணை - ஐந்து அகத்திணைகளும்,
திணைவைப்புமுறை – முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
பாவகை - வெண்பா
கட்டமைப்பு
ஐந்திணைகளுக்கும் பத்துப்பாடல்கள் வீதம் 50 பாடல்கள் பாடப்பட்டதால் இவ்வாறு திணையை அடிப்டையாகக் கொண்டு பாடுவது ஐங்குறுநூற்றின் தாக்கம் என்றே கருதமுடிகிறது.
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.

நிற்க அதற்குத் தக - Nirkka Atharkku Thaga (Kindle Edition)


ற்பதால் மட்டுமே மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கல்வி அறிவுடைவர்களுக்கே முகத்திலிருப்பன கண்கள், கல்லாதாருக்கோ அவை புண்கள் என உரைப்பார் வள்ளுவர். நல்ல நூல் படிக்கப் படிக்க புதிய புதிய சிந்தனைகளை நல்கும் அதுபோல நல்ல பண்புடையவர்கள் பழகப் பழக இன்பம் தருவர் என்றும் உரைக்கிறார்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - 391 என்ற குறளில், கற்க என்ற சொல்லை அறிதல் என்றும், கசடறக் கற்க என்ற சொல்லை தெரிதல் என்றும் கற்பவை என்ற சொல்லை தெளிதல் என்றும் நிற்க அதற்குத் தக என்பதை, அறிந்து நிற்க! தெரிந்து நிற்க! தெளிந்து நிற்க! சூழலுக்குத் தக நிற்க! என்றும் பொருள் கொள்ளமுடிகிறது. இக்குறள் வழி, இந்நூல், அறிதல், தெரிதல், தெளிதல், நிற்றல் என நான்கு நிலைகளில் கல்வி குறித்த பல்வேறு சிந்தனைகளை நல்குகிறது.

வியாழன், 28 மே, 2020

இன்றைய சிந்தனைகள்: (Today's Thoughts) (Tamil Edition) Kindle Edition


இன்றைய சிந்தனைகள் என்ற இந்த நூல் ஒவ்வொரு நாளும் அந்த நாளின் சிறப்புகளையும், பொன்மொழிகளையும் எடுத்துரைக்கிறது

திருக்குறள் பொன்மொழிகள்: ( மின்னூல்) (Tamil Edition) Kindle Edition


      மனிதனால் மனிதனுக்கு எழுதப்பட்ட திருக்குறள் என்னும் உலகப்         பொதுமறைக்கு பல விளக்க உரைகள் இருந்தாலும், இந்த ஒரு வரி உரை என்பது எனது புரிதலின் வெளிப்பாடாகவே அமைகிறது..

       நவில்தொறும் நயம்தரும் நூல்! நுண்ணிய நூல்! மெய்ப்பொருள் காட்டும் நூல்! அற்றம் காக்கும் நூல்! அறிதோறும் அறியாமை காட்டும் நூல்! தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்ற நூல்! வருமுன்னர் காக்கும் நூல்! மெய்வருத்தக் கூலிதரும் நூல்! நுண்மாண் நுழைபுலம் தரும் நூல்! புகழொடு தோன்றிய நூல்! தனக்குவமை இல்லாத நூல்! கேட்டார்ப் பிணிக்கும் நூல்! நா நலம் தரும் நூல்! இடுக்கண் களையும் நூல்! என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நூல் திருக்குறள். இந்நூலுக்கு எத்தனை உரைகள் வந்தாலும், எத்தனை மாநாடுகள் நடத்தினாலும் இதன் உட்பொருளை முழுமையாக யாரும் புரிந்துகொள்ள இயலாது. அதனால் தான் காலந்தோறும் இந்நூலுக்கு புதிய புதிய உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. உரைகளின் வரிசையில் இவ்வுரை, உரையாசிரியர்களைக் கடந்து நான் பெற்ற சிந்தனைகளை சமகால மொழிநடையில் பதிவுசெய்தல், திருக்குறள் ஒரு வாழ்வியல் வழிகாட்டி நூல் என்பதை உணர்த்துதல், பல்வேறு மொழிகளிலும் வழங்கப்பட்டுவரும் உலக அறிஞர்களின் பொன்மொழிகளுக்கு இணையான சிந்தனைவளமுடையது திருக்குறள் என்பதை வெளிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக எழுதப்பட்டது

 

- முனைவர் இரா.குணசீலன்

 

மின்னூல் பதிவிறக்க முகவரி

புதன், 27 மே, 2020

அவையஞ்சாமை - திருக்குறள்


திருக்குறள் - 73. அவையஞ்சாமை

 
வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.                               721
நல்ல பேச்சாளர், அச்சத்தினால் தவறாகப் பேசமாட்டார்கள்
 
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.                                       722
கற்றோரும் போற்றுமாறு பேசுவோர் கற்றோருள் கற்றோராவார்
 
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.                                       723
போருக்கு அஞ்சாதார் எளியவர், அவையில் அஞ்சாதாரே அரியவர்
 
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.                                           724
தெரிந்ததைப் புரியுமாறு, கூறி தெரியாததை  கேட்டு அறிக
 
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.                                  725
நற்சபையில் அஞ்சாமல் பேச, நல்ல நூல்களைப் படி
 
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.                                          726
கோழைக்கு வாள் எதற்கு? அவையஞ்சுவோருக்கு நூல் எதற்கு?    


பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.                                     727
அவையயஞ்சுபவனின் அறிவு பேடியின் வாளுக்குச் சமம்
 
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.                                               728
பேச்சுத்திறன் இல்லாதவர்கள் பல கற்றாலும் பயனில்லை
 
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.                                      729
அவையச்சம் கொள்வோர், கல்லாதாரைவிடக் கீழானவர்
 
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.                                                73
அவையச்சம் கொள்வோர், வாழ்ந்தும் பயனில்லை

 


வெஃகாமை - பிறர் பொருளை விரும்பாதே..


திருக்குறள் 18. வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.                       171
பிறா் பொருளை விரும்பியவனின் குடியும்கெட்டு குற்றமும் சேரும்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.                       172
நடுநிலையாளர் பிறா் பொருளை விரும்பாதவராவா்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.                     173
அற இன்பம் பெரிதென உணா்ந்தவா்  சிற்றின்பங்களை விரும்பார்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.                      174
புலன்களை வென்றவா் வறுமையால் பிறா் பொருளை விரும்பார்

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.                       175
பிறா் பொருளை விரும்பாமையல்லவா அறிவு   

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.                     176
அருள்வழியென்பதே நல்வழி, பொருள் வழியே தீயவழி

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.                      177
தவறாக சேர்த்த செல்வம் தேவையான நேரத்தில் பயன்படாது

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.                 178
செல்வம் குறையாமலிருக்க வழி பிறர்பொருளை விரும்பாமை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.                      179
பிறா்பொருளை விரும்பாதவரிடமே செல்வம் தங்கும்

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.               180
ஆசை அழிவின் வழி, ஆசையின்மையே வெற்றியின் வழி

செவ்வாய், 26 மே, 2020

நிற்க அதற்குத் தக



  மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும் அடைப்படையாகிறது. உலக மொழிகளுள் தொன்மையானது, தொடர்ச்சியான இலக்கிய, இலக்கண மரபுடையது, காலத்திற்கேற்ப, தன்னைத் தகவமைத்துக்கொள்வது என பல்வேறு சிறப்புகளையுடைய தமிழ் மொழிக்கு, மேலும் பெருமை சேர்க்கும் தலைசிறந்த இலக்கியம் திருக்குறளாகும். உலகமே போற்றும் திருக்குறளை கற்பதும், கற்பிப்பதும் நமது கடமை மட்டுமின்றி காலத்தின் தேவையாகவும் அமைகிறது.

திருக்குறள் கற்றல்
      கற்க, கசடறக் கற்க, கற்பவை கற்க, கற்றபின் நிற்க அதற்குத் தக (391) என்று கல்வி கற்கும் நுட்பம் குறித்து வள்ளுவர் கூறும் சிந்தனையை திருக்குறள் கற்கும் அடிப்படை நுட்பமாகவும் கொள்ள இயலும். வள்ளுவர் கூறும் நுட்பத்தை ஆழ்ந்து நோக்கினால், 1. அறிதல்  2. தெரிதல்  3. தெளிதல் 4. நிற்க அதற்குத் தக ஆகிய கருத்துக்களைக் கற்றல், கற்பித்தல் சார்ந்த நுட்பங்களாகவே காணமுடிகிறது.

திங்கள், 25 மே, 2020

கூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு



தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல், 2008 அன்று நான் இந்த வலைப்பதிவில் மடலின் படிநிலைகள் என்ற முதல் பதிவை எழுதினேன். இன்று எனது 1352 வது பதிவை வெளியிடுகிறேன். இந்தப் பதிவு கூகுளின் அட்சென்சு ஒப்புதலுடன் வருகிறது என்ற மகிழ்சியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

       2008 ல் நான் பதிவு எழுதத் தொடங்கிய காலத்தில் எனது தமிழ் ஆய்வுக்கட்டுரைகளை மட்டும் வெளியிட்டேன். அதற்குக் கிடைத்த மறுமொழிகளால் தொடர்ந்து சங்க இலக்கியம் சார்ந்தும், கணினி நுட்பங்கள் சார்ந்தும் எழுதினேன். என்னை அறியாமல் எனது பதிவுளுக்கு நான் வழங்கிய தலைப்புகளும், குறிச்சொற்களும் என்னை கூகுளுக்கு அறிமுகப்படுத்தின. இன்று முனைவர் இரா.குணசீலன், வேர்களைத்தேடி, https://www.gunathamizh.com/, https://www.gunathamizh.blogspot.in/ என எப்படித் தேடினாலும் என்னை கூகுள் அடையாளம் காட்டும்.

சனி, 23 மே, 2020

மூடுள் மின் வகுப்பறை - 2 I மாணவர் சேர்க்கை I பாடநெறி உருவாக்கம் I திட்டக...



மூடுள் மின் வகுப்பறையில் மாணவர்கள் சேர்க்கை, பாட நெறி உருவாக்கம், திட்டக்கட்டுரை வழங்குதல் குறித்த விளக்கப்பதிவாக இக்காணொளி பகிரப்படுகிறது.

வெள்ளி, 22 மே, 2020

வாத்தியார் பிள்ளை மக்கு!


வைத்தியன் பிள்ளை நோயாளி, வாத்தியார் பிள்ளை மக்கு என்ற பழமொழியைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் வாத்தியார் பிள்ளை என்பதால் இந்தப் பழமொழி என்னை அதிகமாகவே சிந்திக்கவைத்திருக்கிறது. எனது அப்பா பள்ளி ஆசிரியராக இருந்தார், நான் கல்லூரியில் ஆசிரியராக உள்ளேன். என் மகள் வகுப்பில் முதன்மையான மாணவியாகவே படித்துவருகிறாள். அதனால் இந்தப் பழமொழியைக் கேட்கும்போதெல்லாம் மனம் ஆழ்ந்த சிந்தனைக்குள்ளாகிறது.
இது போன்ற பழமொழிகள் சொல்லப்பட்ட காலம் அதன் நோக்கம், காலப்போக்கில் அதை மக்கள் தவறாகப் புரிந்துகொள்வது என்பது இயற்கையே.. 
வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான், திருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான் என்பது வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான், போக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று மாறியது போல, இந்தப் பழமொழியும் சொல்லபட்ட நோக்கமும் வழங்கப்படும் பொருளும் மாறியிருக்கலாம். எனது பார்வையில் இந்தப் பழமொழியின் இன்றைய பொருளையும் எனது கருத்தையும் பதிவுசெய்கிறேன்.

வியாழன், 21 மே, 2020

செவ்வாய், 19 மே, 2020

இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயலிகள் - முனைவா் இரா.குணசீலன்



இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயலிகள் என்ற தலைப்பில் மின் வகுப்பறைகள் பற்றியும், விக்கிப்பீடியா, வலைப்பதிவு மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகள் பற்றியும் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 15.05.2020 அன்று வழங்கிய சிறப்புரை

சனி, 16 மே, 2020

விக்கிப்பீடியா எனும் களஞ்சியம் செய்வோம் - நீச்சல்காரன்




கோயம்முத்தூர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 15.05.2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் நீச்சல்காரன் (எ) இராஜாராமன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டங்கள், விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கான வழிமுறைகள், விக்கிப்பீடியாவின் உள்ளீடு செய்யும் நுட்பங்களையும் செயல்முறையுடன் விளக்கினார். கேள்விகளுக்கான பதில்களும் வழங்கினார். இந்த கூட்டத்தை நடத்திய இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்துக்கும், முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும் நன்றிகள். நிகழ்வை ஒருங்கணைத்த தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவா் ந.இராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றிகள்.