வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 28 ஜூன், 2018

வள்ளுவர் கூறும் அழகு!


                                                                              
உலகின் தலைசிறந்த நூல்களுள் ஒன்றாகவும், மொழி எல்லைகளைக் கடந்து மனிதகுலம் கொண்டாடும் நூலாகவும் திகழ்வது திருக்குறள் ஆகும். தமிழின் அடையாளமாகத் திகழும் இந்நூலில் தமிழ் என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும் தமிழின் சிறப்பை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார் வள்ளுவர். அதுபோல அழகு என்ற சொல்லே திருக்குறளில் பயன்படுத்தப்படவில்லை. அச்சொல்லுக்கு இணையாக கவின், எழில், அணி ஆகிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். வள்ளுவர் பார்வையில் எது அழகு என்பதையும், அதை அவர் வெளிப்படுத்தும் பாங்கினையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

உறுப்புகளின் அழகு

                                உடலில் அமைந்துள்ள உறுப்புகளின் அமைப்பைப் பற்றிக் கூறுவது சாமுத்ரிகா லட்சனம். மனித உடலில் ஒவ்வோர் உறுப்புகளும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகப் போற்றப்படுகிறது. சிலைகளிலும், ஓவியங்களிலும் அழகு என்ற கூறு இதை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்படுகிறது. ஆனால் வள்ளுவரோ அன்புடைமை என்ற அதிகாரத்தில்,                          

               புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும்  யாக்கை
                                 அகத்துறுப்பு அன்பி லவர்க்கு – 79 என்று உரைக்கிறார்.
இவர் பார்வையில் அழகு என்பது புறத்தோற்றம் சார்ந்தது அல்ல. அன்பு என்னும் அகத்தின் உறுப்பு என்ற பார்வை புலனாகிறது.

புதன், 6 ஜூன், 2018

ஐம்பெரும் காப்பியங்கள்


ஐம்பெரும் காப்பியங்கள் ( இலக்கிய வரலாறு)
           தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியங்களுக்கு சிறப்பிடம் உண்டு. தண்டியலங்காரம் பெருங்காப்பியம் என்பதற்கு நுவல்பொருளும், கட்டமைப்பும் நோக்கிய பல விதிகளைக் குறிப்பிட்டாலும், முத்தாய்ப்பாக அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் தழுவியது பெருங்காப்பியம் என உரைக்கும். தமிழ்க்காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் என வடமொழி மரபின் வழிப் பகுத்தனர். ஐம்பெருங்காப்பியங்களாவன,(1)சிலப்பதிகாரம்  (2) மணிமேகலை (3) சீவகசிந்தாமணி                      (4)வளையாபதி(5)குண்டலகேசி ஆகும்.    ஐம்பெரும் காப்பியம் - ஓர் ஒப்புமை