உலகெங்கும் மகளிர் மதிப்புடனும் மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்கிறார்களா? "வுமன் ஃபீஸ் மற்றும் செக்யூரிட்டி இன்டெக்ஸ்' என்ற நிறுவனம் 2017 - 2018-ஆம் ஆண்டுக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் வருமாறு:
பெண்களுக்கு தரப்படும் நீதி, பாதுகாப்பு உள்பட 11 காரணிகள் இதற்கு கவனத்தில் கொள்ளப்பட்டு, 153 நாடுகள் கண்காணிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் பட்டியல்:
1. ஐஸ்லாந்து
2. நார்வே
3. சுவிட்சர்லாந்து
4. ஸ்லோவேனியா
5. ஸ்பெயின்
இந்தப் பட்டியலில் 87-ஆவது இடம் சீனாவுக்கு. இந்தியாவுக்கோ 131-ஆவது இடம்.
பெண்களுக்கு மிகமோசமான மதிப்பை அளிக்கும் நாடுகள் என்று கடைசி ஐந்து இடத்தைப் பிடித்த நாடுகள்:
149. மத்திய ஆப்பிரிக்க குடியரசு
150. பாகிஸ்தான்
151. ஏமன்
152. ஆப்கானிஸ்தான்
153. சிரியா
என இந்தப் பட்டியல் கூறுகிறது.
- ராஜி
நன்றி தினமணி
தினமணியில் படித்தேன். நன்றி.
பதிலளிநீக்குநல்ல தகவல்!! இந்தியாவின் இடம் கவலை அளிக்கிறது..
பதிலளிநீக்கு