பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 15 டிசம்பர், 2017

இன்றைய சிந்தனைகள்



எமது கல்லூரி செய்திப்பலகையிலும், வலைப்பதிவிலும், சமூகத்தளங்ளிலும் நான் வெளியிட்ட சிந்தனைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. இந்த நூல் உருாவக்கத்தில் துணைநின்ற அன்புள்ளங்களுக்கு என்றும் என் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.


புதன், 6 டிசம்பர், 2017

கருத்தரங்க அழைப்பிதழ்


கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், மூன்றாவது ஆண்டாக தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் 12.12.2017 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது.
மலேசியா, அமெரிக்கா, பிரான்சு உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறப்பு பேராளர்களின் கட்டுரைகளும், தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்களின் கட்டுரைகளையும் உள்ளடக்கிய ஆய்வுக்கோவை அன்று வெளியிடப்படவுள்ளது.
மலாயாப் பல்கலைக்கழக, இந்தியவியல் துறையிலிருந்து முனைவர் எஸ்.குமரன் ஐயா அவர்களும், கேரளா, கோழிக்கோடு பல்கலைக்கழகத்திலிருந்து, ரீனு ஜார்ஜ் அவர்களும் கலந்துகொண்டு கருத்தரங்கத்தை சிறப்பிக்கவுள்ளனர். இக்கருத்தரங்கம் சிறப்பாக அமைய கட்டுரை நல்கிய பேராளர்களுக்கு நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சனி, 18 நவம்பர், 2017

செயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும்

கனடாவில் 7-9 அக்டோபர் 2017 நடைபெற்ற இணைய மாநாட்டில் வழங்கிய கட்டுரை......

                                         
     மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என்ற பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல,  கணினி  அல்லது  இயந்திரங்கள்  ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம்வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வழி தமிழ்மொழியைக் கற்றல், கற்பித்தல் குறித்த ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம்
           ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டு 50 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படலாம் என கடந்த ஆண்டு ஆய்வுகளும் வெளிவந்தன. 2030-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏஐ நுட்பத்தின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் 6.6 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஏஐ தொடர்பான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், ஃபேஸ்புக், ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் எல்லாத்துறைகளிலும் இருக்கும் என்பதால் இத்தொழில்நுட்பமானது தமிழ் மொழியில் எந்த அளவு பயன்படுகிறது, என்பதை அறிந்து எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நாம் நம் தமிழ் மொழியின் நுட்பங்களை வளர்த்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது.
கணினிக்கு தமிழ் கற்பித்தல்
      இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் என பல்வேறு நிலைகளில் தமிழ் எழுத்துருச் சிக்கல் பெரிதாக இருந்தது. ஒருங்குறி அதற்கு நல்ல தீர்வாக அமைந்தது. இன்று, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்,  எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல்     (Deep Learning) வரை பல்வேறு நுட்பங்கள் கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்துவரும் ஒவ்வொரு நுட்பங்களுக்கும் ஏற்ப தமிழ் மொழியை நாம் தகவமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கான கலைச்சொல் வளங்களை உருவாக்கவேண்டும். தமிழ் வழி நிரலாக்கம் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கும் வரவேண்டும்.
கணினி வழி தமிழ் கற்றலும், கற்பித்தலும்
      குழந்தைகளுக்கான அடிப்படைத்தமிழ் தொடங்கி தமிழாய்வு வரை கணினி வழி தமிழ் கற்பதற்கான வழிமுறைகளையும், எழுத்து, ஒலி, ஒளி என பல்வேறு வடிவங்களில் கணினி, இணையம், மென்பொருள், குறுஞ்செயலிகள் போன்றவற்றில் தமிழ் கற்பதற்கான சூழல்களை உருவாக்கவேண்டும். மேலும் கணினியில் நழுவம் தொடங்கி தோற்றமெய்மை (Virtual reality) வரை தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் உள்ளன. வலைப்பதிவு, சமூகத்தளங்கள் என காலத்துக்கு ஏற்ப வகுப்பறைகளைக் கடந்து மாணவர்களுடன் ஆசிரியர்கள் தொடர்பில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் கற்றல் கற்பித்தலுக்குக் கணினியை சரியாகப் பயன்படுத்தினால்  உலகுபரவி வாழும் தமிழர்களும் அடுத்த தலைமுறையினருக்குக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கமுடியும்.
தமிழ் கற்றல், கற்பித்தலில் மனிதனும் ஏஐ நுட்பமும்
     தமிழ் கற்றல் என்பது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நடைபெற்றாலும், உள்நாடு, வெளிநாடு எனவும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற நிலையிலும் தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்கள், எழுத்து வடிவத்தை அறியாதவர்கள் எனவும் தமிழ் கற்போர் பல வகையில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் கற்றல், கற்பித்தல் என்பது கணினி மனிதனிடம், மனிதன் கணினியிடம்  என இரு நிலைகளில் நிகழ்கிறது. அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, நினைவுத்திறன், செயல்திறன், உணர்வுகளைக் கையாளும் திறன் என பல்வேறு செயல்பாடுகள் மனிதனை அடிப்படையாகக் கொண்டு கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
ஐ.கியு + இ.கியு = ஏ.ஐ (IQ + EQ = AI)
            Intelligence quotient என்ற சொல்லை நுண்ணறிவு என்றும், சுருக்கமாக அதை IQ என்றும் அழைக்கிறோம். அதுபோல Emotional Intelligence என்ற சொல் உணர்வுகளை கையாளும் அறிவைக் குறிப்பதாக அமைகிறது. அதைச் சுருக்கமாக  EQ என அழைக்கிறோம். Artificial Intelligence என்ற சொல்லை,  செயற்கை நுண்ணறிவு என்றும் AI என்றும் அழைக்கிறோம். இன்று மனிதர்களின் நுண்ணறிவுத்திறனை அறிந்துகொள்ளப் பல இணையதளங்கள் உள்ளன. மனித உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உளவியல் அடிப்படையில் பல புரிதல்கள் ஏற்பட்டுள்ளன. மனிதர்களின் இயற்கையான அறிவைக்கடந்து திறன்பேசி போன்ற பல நுட்பியல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தேடுபொறி முதல் சமூகத்தளங்கள் வரை இணையத்திலும் சராசரி மக்களின் பயன்பாட்டிலுள்ள நுட்பியல் கருவிகளிலும் மனித நுண்ணறிவை அளவிடும் முறைகளும், உணர்வுகளை கையாளும் நுட்பங்களும் மேம்படுத்தப்படவேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. திறன்பேசி முதல் பல்வேறு நுட்பியல் கருவிகளிலும் இதனைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
மனிதன் -  ஏ.ஐ நுட்பம்
      கணினியும், இணையமும், மென்பொருள்களும், குறுஞ்செயலிகளும் மனிதனோடு கற்றல், கற்பித்தல் என்ற நிலைக்கு வந்துவிட்டன. இந்நிலையில் யுடியுப், கான் அகாடமி போன்ற காணொளி வழி கற்பித்தல், ஸ்மார்ட் கிளாஸ், வர்சுவல் கிளாஸ் என்றழைக்கப்படும் வகுப்பறைச் சூழல்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்துவிட்டன. சராசரி ஆசிரியரின் மொழியறிவு, பொது அறிவு, பொதுவான அறிவு, நினைவுத்திறன், கற்பனை வளம், ஒப்பீட்டு அறிவு, உவமை  ஆகியன ஏ.ஐ நுட்பியல் கருவிகளுக்குப் போதுமானதாகக் கற்பிக்கப்படவில்லை. கணினி வழி தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் நிறைய உருவாக்கப்பட்டிருந்தாலும், கணினி, மனிதனிடம் கற்கவேண்டிய பண்புகள் நிறையவே உள்ளன.  
நிறைவாக..
·         மனிதர்களை ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணினிகளை  உருவாக்கும் நோக்குடன் வளர்ந்துவரும் துறையே ஏஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத்திறன் என்ற துறையாகும்.
·         ஏஐ நுட்பத்தால் இன்றைய சூழலில் கணினி முதல் கணினி சார்ந்த பல்வேறு நுட்பியல் கருவிகளும் திறன்மிக்கனவாகவும் அவரவர் மொழியிலும் பயன்படுத்த இயலும் என்ற சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்நுட்பத்தால் தமிழ் கற்றல் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
·         இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் சமகால பயன்பாடுகளில் ஏஐ என்ற நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால் கணினிக்கு தமிழ் கற்பித்தல் வழியாக தமிழ் மொழியின் பெருமையை மேலும் உலகறியச் செய்ய இயலும்.
·         சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்,  எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல்     (Deep Learning) என பல்வேறு முறைகளில் கணினிக்கு தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
·         மேலும் கணினி வழியாகத் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான சிறப்பான களங்கள் உருவாகியுள்ளன. ஐ.கியு, இ.கியு, ஏ.ஐ, என்னும் அறிவு குறித்த தெளிவான புரிதல், செயற்கை நுண்ணறிவுத்திறன் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் குறித்த ஆய்வில் எதிர்காலத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.
·         கணினிக்குத் தேவையான தமிழ் மொழி அறிவை முறையாகக் கற்பித்தால் எதிர்காலத்தில் கணினிகளை மனிதனுக்கு மாற்றாக மட்டுமின்றி மனிதனுக்குப் போட்டியாகவும் உருவாக்கமுடியும்.

·         ஒருகாலத்தில் அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்று மனிதர்களின் திறமைகளைப் போற்றினோம். இன்று மனிதனுக்குப் போட்டியாக கணினிகள் பல்வேறு திறன்களுடன் வளர்ந்துவருகின்றன. இச்சூழலில், கணினிக்கு தமிழ் சார்ந்த பொது அறிவைக் கற்பிப்பது மிக எளிதாக உள்ளது. ஆனால் பொதுவான அறிவு அதாவது அதைக் கேட்பரின் திறனறிந்து எவ்வாறு சொல்வது என்ற அறிவைக் கணினிக்குக் கற்பிப்பது நம்முன் உள்ள மிகப்பெரிய இலக்காகவே உள்ளது.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் மூன்றாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
தலைப்பு - தமிழ் ஆங்கில இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்

கருத்தரங்க நாள் - 12.12.2017


கட்டுரை வழங்க இறுதி நாள் - 05.11.2017

தொடர்புக்கு - 9894829151
தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




திங்கள், 4 செப்டம்பர், 2017

கணித்தமிழ் உரையரங்கம்

கணித்தமிழ் - செய்தனவும் செய்ய வேண்டுவனவும்

உரையரங்கம்




அன்புடன் அழைக்கிறோம்

புதன், 23 ஆகஸ்ட், 2017

திருமண அழைப்பிதழ் மாதிரி



நன்றி முனைவா் சங்கரராம பாரதி.

தங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய

அன்புடன் வாழ்த்துகிறேன்.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்


இன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வழி கற்றல் என்ற நிலையில் வீட்டுக்கொரு நூலகம் என்பதையோ, புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு வாசிக்கவேண்டும் என்பதையோ, இன்றைய தலைமுறையினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. புத்தகங்களின் பெருமை பற்றியும் புத்தக வாசிப்பின் அருமை பற்றியும், நூலகங்களின் தேவை பற்றியும் நான் வாசித்த பொன்மொழிகளின் தொகுப்பு,

இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்

ஒரு  கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி

நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. - மார்க் டிவைன் 

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு.  

எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன - வால்ட் டிசினி

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்

புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா

போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்

உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு


ரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.

வியாழன், 20 ஏப்ரல், 2017

வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு!

(பாவேந்தர் நினைவுநாள் பதிவு)
ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேறற்றம்!
தமிழ் மொழிக்கு ஒரு வளர்ச்சி என்றால் அது உன் வளர்ச்சி!
கண்டறிவாய்! எழுந்திரு நீ!
இளந்தமிழா, கண்விழிப்பாய்!
இறந்தொழிந்த
பண்டை நலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும்நீ
படைப்பாய்! இந்நாள்
இளந்தமிழனே! எழுந்திரு! விழித்துக்கொள்! நம் பழம்பெருமையை மீட்டுருவாக்கு!
தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெழுந்தே!
தமிழ்மொழியின் பல்வேறு துறைகள் வளர தொண்டு செய்!
உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெலாம்
உன்றன் வெற்றி!
தமிழ்த்தாய் பெறும் வெற்றியெல்லாம் உனது வெற்றி!

அயராதே! எழுந்திருநீ!
இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
நாமடைந்த
துயரத்தைப் பழிதன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய் இந்நாள்
இளந்தமிழா! துடித்தெழு! அறம்செய்! நம் துயரையும், பழியையும், அடிமை நிலையையும் உணர்ந்து அதைத் துடைத்தெறி!
செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே.
தமிழின் எல்லாத் துறைகளையும் வளமாக்கு!
வாழியநீ! தமிழ்த்தாய்க்கு
வரும்பெருமை உன் பெருமை!
வயிற்றுக்கு ஊற்றக்
கூழின்றி வாடுகின்றார்;
எழுந்திருநீ! இளந்தமிழா
குறைதவிர்க்க
நீ வாழ்வாயாக! தமிழ்த்தாய்க்கு வரும் பெருமை உன் பெருமை!
பசியில் வாடுவோர் பலர் அந்த நிலையை நீ தான் மாற்றவேண்டும்!
ஆழநிகர் படைசேர்ப்பாய்!
பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்குவிப்பாய்!
வலிமையான பெரும்படை சேர்! பொருள் சேர்! இன்பத்தை உருவாக்கு!
ஊழியஞ்செய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே
தொண்டுசெய்! தமிழ் உணர்வுகொண்டே எல்லாத்துறைகளையும் வளப்படுத்து!
உணர்ந்திடுக தமிழ்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!
தமிழ்த்தாய்க்கு ஒரு தீமை என்றால் அது உனக்கும் தானே!
பிணிநீக்க எழுந்திருநீ
இளந்தமிழா, வரிப்புலியே,
பிற்றை நாளுக்
கணிசெய்யும் இலக்கியம் செய்!
அறத்தைச் செய்! விடுதலைகொள்
அழகு நாட்டில்!
பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட்டானே,
நோய் நீக்க எழுந்திரு! இளந்தமிழா! வரிப்புலியே!
எதிர்காலம் பேசும் அழகிய இலக்கியத்தை எழுது! அறம் செய்!
சுதந்திரமாக வாழ்! அழகிய நாட்டில் பணி செய்! தமிழின் எல்லாத்துறைகளிலும்! பழம்பெருமைகொண்ட நாட்டானே அறியாமை நோய்நீக்க எழுந்திரு! இளந்தமிழா! வரிப்புலியே! எழுந்திரு!
எதுசெய்ய நாட்டுக்கே
எனத்துடித்த சிங்கமே!
இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்குத்
தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்
தமிழ்நாட்டுக்கு என்ன செய்யவேண்டும் என்று துடித்த சிங்கமே!
இன்றே! புதுநாளை உண்டாக்கு! தமிழைக் காப்பாய்! புத்துணர்வு கொள்வாய்! அதிர்ந்து எழு! எல்லாத்துறைகளிலும் தமிழால் அழகாக்கு!
இதுதான் நீ செயத்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.
இதுதான் நீ செய்யவேண்டிய முதன்மையான பணி எழு நன்றாக!















































































  

புதன், 19 ஏப்ரல், 2017

மகாகவி பாரதியாரின் தொலைநோக்குப் பார்வை!


கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் திறமைகொண்டவர் மகாகவி பாரதியார்.  இவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் சிறப்புடையன. வாசிப்போர் அறிவுத்திறனுக்கேற்ப அக்கவிதைகளைப் பொருளாழம் புலப்படும். அவர் பாடல்களுள், தேசிய கீதங்கள் - பாரத நாடு - பாரத தேசம் என்ற பிரிவில் உள்ள ஒரு பாடலின் விளக்கத்தைக் காண்போம்.

தொழில்நுட்ப உலகில் வாழும் நமக்கு வானொலி கூட இல்லாத காலத்தில் வாழ்ந்த பாரதி கண்ட கனவு வியப்பளிப்பதாகத்தான்

இருக்கும்! செக்கிழுத்த செம்மல் என்றழைக்கப்பட்ட வ.உ.சி அந்நியருக்கு எதிராக கப்பல் விட்ட மகிழ்ச்சியை பாரதியார் இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். தொலைநோக்குப் பார்வையோடு
பல சிந்தனைகளை இப்பாடலில் பதிவுசெய்துள்ளார். 

தொன்மையால், பக்தியால், கல்வியால், தொழிலால்,

வளங்களால் சிறந்தது நம் பாரதநாடு என அடிமைப்பட்ட பாரதமக்களிடையே நாட்டின் பெருமையை
உணர்ச்சிபொங்க எடுத்துரைக்கிறார். நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதாகவும், மக்களின் ஒற்றுமையை
எடுத்தியம்புவதாகவும் இப்பாடல் திகழ்கிறது.
பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் -- மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்.
வறுமையால் ஏற்படும் பயத்தையும், மனிதன் தனக்குள் தோன்றும் துயரமாகிய பகையையும் வெல்லவேண்டுமானால் பாரத தேசத்தின் புகழையும் பெருமையையும் நினைத்துக் கொள்ளவேண்டும்.  பாரத தேசமென்று பெயர் சொன்னாலே வறுமையும் போய்த் துயரமும் மறைந்து விடும் எனபது பாரதியாரின் கருத்து.
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் -- அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத) 1
வெள்ளி போலப் பளபளக்கும் பனி மூடிய வட இமய மலையும்,
மேல்திசை, தென் திசைக் கடலு நமக்குச் சொந்தம்,
அங்கே உலாவி அவ்விடத்து எழில் கண்டு இன்புறுவோம்.
இங்கே கப்பல்களை விட்டுப் பல நாடுகளுடனும் தொடர்பு கொள்வோம்! நாட்டில் பல சமயப் பள்ளிகள் உண்டு! கோயில்கள் உண்டு! இவற்றை

எண்ணும்போதே எம் தோள்கள் பூரித்துப் போகின்றன.
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்(பாரத)             2
சிங்களத் தீவாகிய ஈழத்திருநாட்டைத் தாய் நாட்டுடன் சேர்த்து,
இடையில்   உள்ள சிறு கடலை மேடாக்கிப் பாலம் அமைப்போம்!
வங்க நாட்டில் பாய்ந்துவரும் கங்கை யாற்று நீர் வீணே கடலில் பாய்கிறது, அதனைத்திருப்பி மத்தியிலுள்ள நாடுகளில் பாயவிட்டுப் பயிர் செய்வோம்!
இக்காலத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும், ஆற்றுப் பாய்ச்சலைப் பொறியியலறிவு கொண்டு திருப்பி வளமற்ற நிலங்களையும் வளம்படுத்துவோம்!
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.    (பாரத)3
பூமியிலே சுரங்கங்களை வெட்டுவோம். தங்கம், பொன், வெள்ளி, இரும்பு, கரி, நிலநெய் போன்றவற்றையெல்லாம் பூமித் தாயின் மடியிலிருந்து உரிமையோடு எடுத்துக்கொள்வோம்! அவற்றை உலகெங்கும் விற்று நமக்கு வேண்டிய பல்வேறு பொருளைப் பெற்றுவருவோம்.!
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே (பாரத)               4
பல்வேறு நாட்டின் வணிகர், நமது நாட்டு முத்துக்காக நம் தென் கடலே நோக்கி வருவார்கள், அவர்கள் நமக்கு வேண்டியவற்றைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நம்மிடத்துள்ளவற்றை வாங்கிச் செல்ல மேல்கரைத் துறைகளுக்கு ஆசையோடு வருவார்கள்!
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம். (பாரத)          5
சிந்துநதி நம்முடையது. அதில் வீசும் நில வெளி நமக்கின்பம் தருவது! சேரநாடு நம்முடை யது. அந் நாட்டு அழகுக் கன்னியர் நம்மவர்!  அழகிய தெலுங்கு நமது மொழி! அதில் ஒலிக்கும் தீஞ்சுவைப் பாடல் நமது இசை!   இவ்வளவு சிறப்புகளையும் கொண்ட பாரத நாடு முழுவதும் நமது நாடு! ஆங்காங்கு காணும் சிறப்புக்க ளெல்லாம் எல்லார்க்கும் உரியன!
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)          6
கங்கைக் கரையிலே கோதுமையானால், காவிரிக் கரையிலே வெற்றிலை!   இதற்கு அது பண்டமாற்று! வீரமுள்ள மாராட்டியருடைய மொழியில் யாத்த கவிதைகளுக்குப் பரிசு சேர நாட்டு ஆனைத் தந்தம்!
காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.  (பாரத)      7
காசியிலே அறிஞர்கள் பேசும் உரைகளை தெற்கேயுள்ள காஞ்சியிலிருந்தபடியே கேட்கும் கருவியை நாம் செய்வோம்!
ராஜபுத்திர வீரர்களுக்கு கன்னட தேசத்துத் தங்கத்தைப் பரிசளிப்போம்!
பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம். (பாரத)         8
பட்டாடை, பருத்தி உடை எல்லாம் செய்து மலை மலையாகக் குவித்துப் பல தேசத்திலிருந்தும் பணம் கொண்டு வருபவர்களுக்கு விற்று நம் நாட்டுப்  பொரு ளாதாரத்தை பெருக்குவோம்!
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்செய் வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம். (பாரத)9
எழுத்து என்னும் ஆயுதங்கள் செய்வோம்! காகிதங்களும் நாமே செய்வோம்!
 இதற்காக ஆலைகளும், தொழில் வளர்வதற்கேற்ற கல்விச்சாலைகளும் நம் நாட்டிலேயே உருவாக்குவோம்!  அவற்றிலே ஓயாது உழைப்போம்!
உண்மையையே உயிராகக் கொண்டு நடப்போம்! இல்லாதவர்க்கு உள்ளவர்    கொடுத்து, இல்லை என்ற சொல் இல்லாமல் வாழ்வோம்.
 குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள்செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.    (பாரத)  10
குடைகள் செய்வோம்! உழும் கருவிகள் செய்வோம்! கோணிச் சாக்குகள் செய்வோம்! இரும்பு ஆணிகள் செய்வோம்! விரைந்து செல்லும் ஊர்திகள் செய்வோம்! உலகமெலாம் நடுங்கும் பெரும் கப்பல்கள் செய்வோம்!

மந்திரம் கற்போம்வினைத் தந்திரங் கற்போம்
வானை யளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.  (பாரத)        11  


மந்திரங்கள் கற்பதுபோல கைவினை நுட்பங்களையும் கற்போம்!வானின் நீளத்தையும், கடலின் ஆழத்தையும் அளப்போம்!
விண்வெளி நுட்பங்கள் கண்டுதெளிவோம்! சாலைகளைப்பெருக்குவோம்
காவியம் செய்வோம்நல்ல காடுவளர்ப்போம்
கலை வளர்ப்போம்கொல்ல ருலைவளர்ப்போம்
ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள்செய்வோம்
உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம்.  (பாரத) 12        
 காவியங்கள் மட்டுமல்ல காடுகளையும் வளர்ப்போம்! கலைகள் மட்டுமல்ல, பல கருவிகள் செய்யும் கொல்லர் உலைகளையும் வளர்ப்போம்! உலகில் உள்ள எல்லாத்தொழிலையும் மகிழ்ந்து செய்வோம்!
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்
சாதி இரண்டே! நீதி நெறியுடன் வாழ்ந்து பிறர்க்குதவுபவர் உயர்ந்தோர்! மற்றவர் தாழ்ந்தோர்! என்று உரைத்த தமிழ்மகள் ஔவையின் சொல்லை அமுதமென மதிப்போம்! அதன்படி நடப்போம்!