வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்


இன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வழி கற்றல் என்ற நிலையில் வீட்டுக்கொரு நூலகம் என்பதையோ, புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு வாசிக்கவேண்டும் என்பதையோ, இன்றைய தலைமுறையினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. புத்தகங்களின் பெருமை பற்றியும் புத்தக வாசிப்பின் அருமை பற்றியும், நூலகங்களின் தேவை பற்றியும் நான் வாசித்த பொன்மொழிகளின் தொகுப்பு,

இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்

ஒரு  கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி

நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. - மார்க் டிவைன் 

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு.  

எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன - வால்ட் டிசினி

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்

புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா

போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்

உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு


ரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.

26 கருத்துகள்:


  1. |o| அனைவரும் அறிய வேண்டிய பயனுள்ள தொகுப்பு ஐயா.
    தாங்கள் கூறுவது போல நூல் வாசிப்பு என்பது குறைந்து வருகிறது.இது போன்ற வாசங்களை படிக்கும் போது தான் நூல்களின் அருமை தெரிகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அனைத்துமே அருமையான பொன்மொழிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தங்களது பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    http://www.ypvnpubs.com/2017/04/blog-post_27.html
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான பொன்மொழிகள் முனைவரே
    திரு. நெல்சன் மண்டேலாவின் பொன்மொழி மிகவும் உயர்வானது.

    பதிலளிநீக்கு
  5. அனைவரும் போற்றக்கூடிய, பின்பற்ற வேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  6. இணய வாசிப்பு அதிகரித்து புத்தக வாசிப்பு குறைந்ததோ..

    பதிலளிநீக்கு
  7. பிள்ளைத்தமிழ் பருவங்கள் பற்றித் தெளிவாக அறிய தேடியபோது தங்கள் பக்கத்தைப் பார்த்தேன்.நல்ல வாசிப்பாளரின் அறிமுகம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன், நன்றி

    பதிலளிநீக்கு
  8. உயிரின் சுவாசமல்லவா புத்தகம்,
    அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்,
    நாம் வரம் பெற எவரோ இருந்த தவமல்லவோ புத்தகம்.
    -வைர முத்து

    பதிலளிநீக்கு
  9. அருமையான பொன்மொழிகள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  10. நல்ல செய்தி ஆனால் தமிழக தலைவர்களின் புத்தக வாசிப்பு, புத்தக வாசிப்பு பற்றிய கருத்துகள் வெளியிட மனம் இல்லை.

    குறிப்பாக:
    தான் வாசிதுக்கொண்டிருக்கிற புத்தகத்தை படித்து முடிக்க தன்னுடைய புற்று நோய் அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார் அறிஞர் அண்ணா.

    எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
    எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.

    பதிலளிநீக்கு