வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 6 ஏப்ரல், 2017

ஒரே நாளில் 100 தமிழ்ப் பதிவுகள்!


எனது பிறந்தநாளில் நான் விரும்பும் மிகப் பெரிய பரிசை
எனக்குத் தரவேண்டும் என்று 

எங்கள் கே.எஸ்.ஆா் மகளிர்கல்லூரியின் மாணவிகள் 

எங்கள் கல்லூரி வலைப்பதிவில் ஒரே நாளில் 100 இடுகைகளைத் தமிழில் பதிவிட்டுள்ளனர். 

இந்தப் பரிசை என் வாழ்நாளின் மறக்கமுடியாத பரிசாகக் கருதுகிறேன்.
சமூகத்தளங்களில் என்னோடு உரையாடுபவர்கள் தமிழில் பேசினாலோ, தமிழில் தட்டச்சு செய்தாலோ கூட 
மகிழ்ச்சி கொள்வேன். இன்று எங்கள் மாணவிகளின் முயற்சி என்னை இன்னும் நம்பிக்கையுடன், ஊக்கத்துடன் செயல்படத் துணைநிற்கிறது.

இந்த முயற்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செ.வைசாலி அவர்களுக்கும், அ.கோகிலா, சா.சரண்யா,ஜெ.ஜனனி, சுகன்யா, சாலினி, சாந்தினி,டி. சுதா, மோகனபிரியா, நா.ராஜலட்சுமி, பர்சானா உள்ளிட்ட ஒவ்வொரு மாணவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

12 கருத்துகள்:

  1. இது ஆரம்பம் மட்டும் தான் ஐயா.நான் பிறவியால் பெண்ணாக இருந்தாலும் செயலின் மூலம் எனது கருத்துகளை இச்சமுதாயத்திற்கு தெரிவிப்பதில் ஒரு ஆணுக்கு நிகர் என்பதை எனக்கு புரிய வைத்தவர் தாங்களே ஐயா.

    தங்களின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்றை தான் இன்று நான் செயல்படுத்தி உள்ளேன்.இன்னும் தங்களின் எண்ணங்கள் என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும் அதனையும் நான் செயல் வடிவமாக கொண்டு வருவேன்.ஒவ்வொரு நாளும் தங்களுக்கு சிறப்பான பரிசை வழங்கி கொண்டே இருப்பேன்.

    இவ்வன்பு நிறைந்த தருணத்தில் நான் குறிப்பாக நான்கு நபர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.முதல் நபர் நமது கல்லூரி முதல்வர் ( எனது நண்பர் ) மா.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு நன்றி.இரண்டாவது நபர் வேறு யாருமில்லை தாங்கள் தான் ( எனது அப்பா ).மூன்றாவது நபர் எனது சகோதரி கோகிலா இரவு என்று கூட கருதாமல் எனக்காகவும் எனது நம்பிக்கைகாவும் தூக்கத்தை தொலைத்து உதவி செய்தார்.நான்காவது சகோதரி சரண்யா கட்டுரைகள் அனைத்தையும் சேகரித்து தந்தார்.மேலே கூறிய நான்கு நபர்கள் தான் இன்று நான் தங்களுக்கு அளித்த பரிசுக்கு முக்கிய காரணமாக விளங்குபவர்கள்.

    தங்களின் ஆசிர்வாதம் இல்லாமல் என்னால் இதனை செயல்படுத்திருக்க முடியாது.இந்த வருடம் மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் தங்களின் பிறந்த நாளை இதை விட சிறப்பாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் நம்பிக்கை நிறைந்ததாகவும் என்னால் முடியும் வரை மாற்றி காட்டுவேன்.

    எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய குணசீலன் அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்..
    ^_^

    பதிலளிநீக்கு
  2. கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல ஆசிரியர். அவருக்கேற்ற மாணவிகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு நல்ல ஆசிரியருக்கு மாணவிகள் கொடுக்கும் மிக நல்ல பரிசு.. மாணவிகளின் மத்தியில் நல்ல ஆசியரியராக வலம் வந்து கொண்டு இருக்கும் இரா.குணசீலன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றிகள் அவர்கள் உண்மைகள்

      நீக்கு
  4. உண்மையிலேயே வாழ்வில் என்றென்றும் மறக்க இயலாப் பரிசு
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. முனைவர் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். ( உங்கள் வலைத்தளத்தின் இந்த லே அவுட்டை மாற்றுங்கள் )

    பதிலளிநீக்கு